AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs WI: அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பு.. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் ‘டூ-ஆர்-டை’ போட்டியை எங்கு காணலாம்?

IND vs WI T20 World Cup Live Streaming: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இந்த சூப்பர் 8 போட்டி நாளை அதாவது 2026 மார்ச் 1ம் தேதி நடைபெறும். போட்டி இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்கும். டாஸ் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு நடைபெறும். இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

IND vs WI: அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பு.. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் ‘டூ-ஆர்-டை’ போட்டியை எங்கு காணலாம்?
சூர்யகுமார் யாதவ் - ஷாய் ஹோப்Image Source: ICC/Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Feb 2026 14:37 PM IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) சூப்பர் 8 சுற்றில் மிக முக்கியமான போட்டிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) இப்போது தயாராக உள்ளது. வருகின்ற 2026 மார்ச் 1ம் தேதி இந்திய அணி, பலம் மிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ளும். மேலும் இந்த போட்டியானது கிட்டத்தட்ட காலிறுதி போட்டியாகவே கருதப்படுகிறது. அதாவது, இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதியில் ஒரு இடத்தைப் பிடிக்கும். அதே நேரத்தில் தோல்வியடையும் அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும். இரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸில் நடைபெறும். ஜிம்பாப்வேக்கு எதிரான பெரிய வெற்றிக்குப் பிறகு இந்திய அணி நம்பிக்கையுடன் உள்ளது. எனவே, ஆடும் லெவன் அணியில் பெரிய மாற்றங்களைச் செய்ய இந்திய அணி விரும்பவில்லை. எனவே, சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் படேல் தொடர்ந்து விளையாடலாம்.

ALSO READ: வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான வாழ்வா-சாவா போட்டி.. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய சாதகம்..

பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுமா இந்திய அணி?

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெற்றி பெற்ற போதிலும், இந்தியாவின் பந்துவீச்சு ஒரு கவலையை தருகிறது. ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் 250க்கு மேற்பட்ட ரன்களை குவித்தபோதிலும், பந்துவீச்சில் 184 ரன்களை விட்டுக்கொடுத்தது. இது இந்திய அணிக்கு டெத் ஓவர்களில் முன்னேற்றம் தேவை என்பதை தெளிவாக காட்டுகிறது. இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணியும் பந்துவீச்சில் மீண்டும் சிறப்பாக செயல்படுவது முக்கியம்.

இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி அரையிறுதிக்கான பாதையை உறுதியாக்கும். இந்தியாவின் பேட்டிங் நல்ல நிலையில் உள்ளதால், மீதமுள்ள இன்னிங்ஸில் ஏற்படும் அழுத்தத்தைத் தவிர்க்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

போட்டிகளை எப்போது, ​​எங்கே பார்ப்பது?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இந்த சூப்பர் 8 போட்டி நாளை அதாவது 2026 மார்ச் 1ம் தேதி நடைபெறும். போட்டி இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்கும். டாஸ் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு நடைபெறும். இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆன்லைன் பார்வையாளர்கள் ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் வலைத்தளத்தில் போட்டியை நேரடியாகப் பார்க்கலாம்.

ALSO READ: இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றால் யாரை எதிர்கொள்ளும்? உறுதியான எதிரணி..

இரு அணிகளின் முழு விவரம்:

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா , முகமது சிராஜ், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.

வெஸ்ட் இண்டீஸ்:

பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், மேத்யூ ஃபோர்டே, அக்கேல் ஹொசைன், குடகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப், குவென்டின் சாம்ப்சன், ஜாய்டன் சாசீல்ஸ்.

Follow Us