AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IndvsWI: வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால் – கவாஸ்கர் கடும் எச்சரிக்கை

T20 World Cup : டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

IndvsWI: வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால் – கவாஸ்கர் கடும் எச்சரிக்கை
இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை
Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Feb 2026 20:46 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு மீண்டும் பிரகாசமாகியுள்ளது. குறிப்பாக கடந்த சில போட்டிகளில் விமர்சிக்கப்பட்ட இந்திய அணியின் பேட்டிங் வரிசை சொதப்பி வந்த நிலையில், பெரும்பாலான பேட்ஸ்மென்கள் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்தனர். குறிப்பாக தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த அபிஷேக் சர்மா ஃபார்முக்கு திரும்பி அரை சதம் அடித்து அசத்தினார். இருப்பினும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்த நிலையில் அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற மார்ச் 1, 2026 அன்று நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றின் முக்கியமான போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ,மோதவுள்ளன. இந்த போட்டி அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் என்பதால், இந்திய அணி தெளிவான திட்டத்துடன் களமிறங்க வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றங்கள் சரியான முடிவாக அமைந்தது. குறிப்பாக தொடக்க வீரர்களாக இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன்களை பயன்படுத்தியதன் காரணமாக இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது என்றார்.

இதையும் படிக்க : T20 World Cup: ஜிம்பாப்வேக்கு எதிராக இமாலய வெற்றி.. இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புகள் என்னென்ன?

மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அரை சதம் அடிக்கவில்லை என்றாலும் அவர் வேகமாக 24 ரன்கள் அடித்தது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவரது அதிரடி தொடக்கம் இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. இதனால் 256 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை அடிக்க உதவியது என்றார்.

இந்தியாவுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை

தொடர்ந்து பேசிய அவர், முன்பு தொடர்ந்து ரன்கள் எடுக்க சிரமப்பட்ட அபிஷேக் சர்மா இந்தப் போட்டியில் பொறுப்புடன் ஆடி 55 ரன்கள் எடுத்தது அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை காட்டுகிறது. ஆரம்பத்தில் அமைதியாக விளையாடிய அவர், ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆபத்தான ஷாட்டுகளை தவிர்த்தது அவரது அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தை காட்டுகிறது என்றார்.

இதையும் படிக்க : T20 World Cup 2026 : ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

மேலும் பந்துவீச்சிலும் இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது. அக்சர் படேல், சிறப்பாக பந்து வீசி விக்கெட் எடுத்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முற்றிலும் வேறான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த அணியின் பேட்ஸ்மென்கள் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள். இதனால் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகவும் கவனமாக விளையாட வேண்டும் என்றார்.

இதனால் எதிரணியின் தவறுகளை கணித்து அதனை பயன்படுத்தி போட்டியின் ஓட்டத்தை மாற்றும் திறன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இருக்கிறது. இந்திய அணி புத்திசாலித்தனமான திட்டங்கள் மூலம் எதிரணியை ஆச்சரியப்படுத்த வேண்டும். என்று அவர் வலியுறுத்தினார்.

Follow Us