நடிகர் சீயான் விக்ரமின் அடுத்த மிகப்பெரிய திரைப்படமான சீயான் 63 படத்தின் படப்பிடிப்பு 2026 பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களிலும் சீயான் 63 படம் அதிகமாக டிரெண்டாகி வருகிறது.