AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆந்திர பட்டாசு ஆலை தீ விபத்து.. உடல் கருகி பலியான 18 பேர்.. சோக சம்பவம்!

18 Killed In Crackers Manufacture Factory Incident | ஆந்திர பிரதேச மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஆலையில் பணியாற்றிக்கொண்டு இருந்த 18 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

ஆந்திர பட்டாசு ஆலை தீ விபத்து.. உடல் கருகி பலியான 18 பேர்.. சோக சம்பவம்!
பட்டாசு ஆலை வெடி விபத்து
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 28 Feb 2026 16:46 PM IST

காக்கிநாடா, பிப்ரவரி 28 : ஆந்திர பிரதேசத்தின் (AP – Andhra Pradesh), காக்கிநாடா (Kakinada) மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்கள் பணி செய்துக்கொண்டு இருந்தபோது இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், 18 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த கொடூர தீ விபத்து சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆந்திர பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து

ஆந்திர பிரதேச மாநிலம், காக்கிநாடா மாவட்டம், சமர்லகோட்டா பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஆலையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியுள்ளன. இந்த தீ விபத்து ஏற்பட்டபோது ஆலையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டு இருந்துள்ளனர்.

இதையும் படிங்க : கொல்கத்தாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

உடல் கருகி பலியான 18 பேர்

இந்த நிலையில் தீ விபத்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளனர். ஆனால், தீ ஆலை முழுவதும் பரவிய நிலையில் , ஆலைக்குள் பணியாற்றிக்கொண்டு இருந்த 18 ஊழியர்கள் உடல் கருகி பாரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இதையும் படிங்க : தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய மகன்.. பகீர் வாக்குமூலம்!

வருத்தம் தெரிவித்த ஆந்திர முதலமைச்சர்

இந்த சம்பவம் ஆந்திராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ள அவர், அதிகாரிகளுடன் பேசியுள்ளதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Follow Us