சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பந்து உயிரை பறித்தது.. கர்நாடகாவில் 5 வயது சிறுவன் பரிதாப பலி!
Boy Dies After Swallowing Ball: கர்நாடக மாநிலத்தில் சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பந்தை விழுங்கிய சிறுவன் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், மைசூர் மாவட்டத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒரு சிறிய பிளாஸ்டிக் பந்தை விழுங்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார். ஹன்சூர் தாலுகாவில் கெளரிபுராவை சேர்ந்த சந்தோஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் ஒரே மகனான முகுந்த் மயூருக்கு, அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த சிப்ஸ் பாக்கெட்டுக்குள் ஒரு பந்து இருந்ததாக அவரது தாத்தா கூறியுள்ளார். அந்த பந்தை சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது அதனை அந்த சிறுவன் விழுங்கியதாக தெரிகிறது. இதனால், அந்த பந்து சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை பார்த்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
செம்பருத்தி பூவை சாப்பிட்ட 6.5 மாத குழந்தை பலி
சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினர் எந்தவிதமான புகார் அளிக்கவில்லை என்று பிலிகெரே போலீசார் தெரிவித்துள்ளனர். நாயக்கன் மனைவி கௌரம்மா, கௌரிபுரா கிராம பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருந்தார். கடந்த மார்ச் மாதம், மைசூர் மாவட்டத்தில் உள்ள தங்கள் வீட்டின் வெளியே கிடந்த செம்பருத்தி பூவின் ஒரு பகுதியை 6.5 மாத குழந்தை சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது, அந்த குழந்தை மூச்சு விட சிரமப்படுவதை கண்டதும், முதல் உதவிக்காக வந்த குழந்தை உடனடியாக ஹனகோட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் படிக்க: ஆந்திராவில் ரூ.17,912 கோடி வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி




தீவிர சிகிச்சையில் உயிரிழந்த குழந்தை
பின்னர், தீவிர சிகிச்சைக்காக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு, தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. மேலும், தொட்ட ஹெஜ்ஜூர் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் மற்றும் நாவ்யா தம்பதியின் 2- ஆவது குழந்தையான சின்மய் கெளடா என அந்த குழந்தை அடையாளம் காணப்பட்டது.
ஹன்சூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
உடனடியாக, அந்த குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சிறிது நேரத்தில் அந்த குழந்தை பரிதாபமாக உயர்ந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஹன்சூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: கேரளத்தில் வெளுத்து வாங்கும் கனமழை – 7 பேர் மரணம் – அதிர்ச்சி தகவல்