ஆந்திராவில் ரூ.17,912 கோடி வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் அமைந்துள்ள அல்லூரி சீதாராமராஜு சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 1) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆகஸ்ட் 1, 2026: ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் அமைந்துள்ள அல்லூரி சீதாராமராஜு சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 1) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சீதாராமராஜு சர்வதேச விமான நிலையம் சிற்ப்புகள்:
சுமார் ரூ.4,727 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போகாபுரம் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் முனையக் கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள நவீன வசதிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, செக்-இன் மையம், பயணிகளுக்கான வசதிகள், விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அமைப்புகள் குறித்து ஜிஎம்ஆர் (GMR) நிறுவன அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர். மேலும், விமான நிலையத்தின் மாஸ்டர் பிளான், ஏவியேஷன் ஹப் மற்றும் ஏவியேஷன் எட்யூசிட்டி திட்ட மாதிரிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, விமான நிலைய வளாகத்தில் பழங்குடியின கலைஞர்கள் நடத்திய பாரம்பரிய திம்சா (Dhimsa) நடன நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி ரசித்து பாராட்டினார்.
பின்னர், ரூ.17,912 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, சில திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் பொதுக்கூட்ட மேடைக்கு சென்ற அவர், அங்கு மக்களிடையே உரையாற்றினார்.
வட ஆந்திராவின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு போகாபுரம் சர்வதேச விமான நிலையம் முக்கிய மைல்கல்லாக அமையும் என ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.