கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி என்னாச்சு? போஸ்டர் அடித்து கேள்வி எழுப்பும் சூர்யா ரசிகர்கள்
Karuppu Movie release update: தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி பல மாதங்களாக திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளப் படம் கருப்பு. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி என்ன ஆச்சு என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யா தனது 45-வது படத்திற்காக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி உடன் கூட்டணி வைத்தார். ரெட்ரோ படத்தின் பணிகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த போதே சூர்யவின் 45-வது படத்தின் பணிகளும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சூர்யாவின் 45-வது படத்திற்கு கருப்பு என்று டைட்டிலை வைத்தது படக்குழு. இப்படி இருக்கும் சூழலில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தனது. மேலும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது படம் நிச்சயமாக பண்டிகையின் போது வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார்.
இதன் காரணமாக படம் கடந்த 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கே வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் படத்தில் இருந்து முதல் சிங்கிள் மட்டும் தீபாவளி பண்டிக்கைக்கு வெளியானது. அதனைத் தொடர்ந்து கிருஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை கடந்த நிலையில் இதுவரை கருப்பு படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.




கருப்பு ரிலீஸ் என்னாச்சு? போஸ்டரில் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்:
இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி படம் வருகின்ற கோடை காலத்தில் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி என்ன ஆச்சு என்று சூர்யாவின் ரசிகர்கள் போஸ்டரை ஒட்டி கேள்வி எழுப்பி உள்ளனர். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் சூர்யாவின் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இதன் பிறகாவது கருப்பு படக்குழு ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் சூர்யாவின் ரசிகர்கள்.
Also Read… Peddi Movie: ‘பெடி’ படத்தின் 2வது பாடல் ரிலீஸ் எப்போது? – ராம் சரண் கொடுத்த அப்டேட் இதோ!
இணையத்தில் வைரலாகும் போஸ்டர்:
Fans demand for #Karuppu release date update.@Suriya_offl @prabhu_sr @RJ_Balaji pic.twitter.com/mFhGHQP3ML
— Suriya Fans Trends (@Trendz_Suriya) February 28, 2026
Also Read… தமிழில் சாதனை செய்த டாக்சிக் படம்.. விநோயாக தொகை மொத்தம் எவ்வளவு தெரியுமா?