AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 46 படத்தின் கிளிம்ஸ் வீடியோ எப்போது வெளியாகும்? வைரலாகும் தகவல்

Suriya 46 glimpse Video Update: நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் சூர்யா 46. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படம் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் கிளிம்ஸ் வீடியோ எப்போது வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூர்யா 46 படத்தின் கிளிம்ஸ் வீடியோ எப்போது வெளியாகும்? வைரலாகும் தகவல்
சூர்யா 46Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Feb 2026 11:04 AM IST

கோலிவுட் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது அடுத்தடுத்து மூன்று படங்கள் உருவாகி வருகின்றது. இதில் சூர்யாவின் 45-வது படமாக கருப்பு படம் உருவாகி உள்ளது. இந்தப் படம் தான் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சூர்யா 46. இந்த சூர்யா 46 படத்தினை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபலமாக இருக்கிறார் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து இந்த சூர்யா 46 படத்தில் நடிகர்கள் மமிதா பைஜு,
ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, பிஜோர்ன் சுர்ராவ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து உள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் ஜிவி பிரகாஷ் மூன்றாவது முறையாக இந்தப் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 46 படத்தின் கிளிம்ஸ் வீடியோ எப்போது வெளியாகும்?

முன்னதாக தயாரிப்பாளர் நாக வம்சி அளித்தப் பேட்டி ஒன்றில் கருப்பு படத்திற்கு பிறகே சூர்யா 46 படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார். மேலும் படத்தின் கிளிம்ஸ் வீடியோ இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் வெளியாக உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா ஒரு இனிமையான வேடத்தில் இந்தப் படத்தில் காணப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ரஜினி, கமல், விஜய்… நீங்க யார் ரசிகர்? அனிருத்தின் மாஸ் பதில்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கேங்ஸ்டராக நடிகர் நானி… வெளியானது ப்ளடி ரோமியோ படத்தின் அறிவிப்பு வீடியோ