AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல் 2026 தொடக்க தேதி மாற்றம்..? தமிழ்நாடு காரணமா? பிசிசிஐ முக்கிய முடிவு!

IPL 2026 Schedule: 2026 ஐபிஎல் சீசனின் முந்தைய அட்டவணையின்படி, 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அதாவது மார்ச் 26 ஆம் தேதி போட்டியைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

IPL 2026: ஐபிஎல் 2026 தொடக்க தேதி மாற்றம்..? தமிழ்நாடு காரணமா? பிசிசிஐ முக்கிய முடிவு!
ஐபிஎல் 2026 Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Feb 2026 15:22 PM IST

தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ​​டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) பிரமாண்டமாக நடைபெற்று வருவதால், ரசிகர்கள் அடுத்ததாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) சீசன் எப்போது தொடங்கும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாததால், ஐபிஎல் 2026 சீசனுக்கான அட்டவணையும் வெளியிட தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகக் குழு வருகின்ற 2026 மார்ச் முதல் வாரத்தில் கூடி முக்கிய முடிவு எடுக்கும் என்று நம்பப்படுகிறது. அதன்படி, போட்டியின் தொடக்க தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அட்டவணையின் முழு விவரங்களையும் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பு.. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் ‘டூ-ஆர்-டை’ போட்டியை எங்கு காணலாம்?

ESPNcricinfo இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, 2026 ஐபிஎல் சீசனின் முந்தைய அட்டவணையின்படி, 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அதாவது மார்ச் 26 ஆம் தேதி போட்டியைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இறுதிப் போட்டி எப்போது நடைபெறும்?

முன்னதாக, பிசிசிஐ வெளியிட்ட தகவலின்படி, 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2026 சீசனானது, வருகின்ற 2026 மே 31ம் தேதி இறுதிப்போட்டி முடிவு பெற இருந்தது. இருப்பினும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அட்டவணையை இறுதி செய்ய ஐபிஎல் நிர்வாகக் குழு 2026 மார்ச் முதல் வாரத்தில் கூடும் என்று நம்பப்படுகிறது. அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் அட்டவணை தாமதமாகியுள்ளது.

கொல்கத்தா (மேற்கு வங்கம்) மற்றும் சென்னை (தமிழ்நாடு) ஆகியவை முறையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளின் சொந்த மைதானங்களாக இருந்தாலும், அசாமின் தலைநகரான குவஹாத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் இரண்டாவது சொந்த மைதானமாகும்.

ALSO READ: ஜடேஜா இல்லை! ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் நியமனம்!

ஐபிஎல் 2026 சீசனுக்கான அட்டவணை எப்படி வெளியிடப்படும்..?

2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டதிலிருந்து, பொதுத் தேர்தல்கள் அல்லது மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடந்த போதெல்லாம், அட்டவணை இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்த முறையும் அதே மாதிரி திட்டமிட்டு நடத்த பிசிசிஐ வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த நேரத்தில் பிசிசிஐயிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டும் இல்லாதது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், விரைவில் பிசிசிஐ இதுதொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow Us