AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

PAK vs SL: பாகிஸ்தான் அரையிறுதி கனவு.. ஆப்பு வைக்குமா மழை..? வானிலை யாருக்கு சாதகம்?

Pakistan Semi Final Equation: 2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 6 சுற்றின் குரூப் பி புள்ளிகள் அட்டவணையில்​​இங்கிலாந்து ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில், இலங்கை அணி சுற்றில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. அதேநேரத்தில், நியூசிலாந்து தற்போது 3 புள்ளிகளையும் +1.390 நிகர ரன் ரேட்டை கொண்டு 2வது இடத்தில் உள்ளது.

PAK vs SL: பாகிஸ்தான் அரையிறுதி கனவு.. ஆப்பு வைக்குமா மழை..? வானிலை யாருக்கு சாதகம்?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Feb 2026 17:04 PM IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) பாகிஸ்தான் அணி (Pakistan Cricket Team) அரையிறுதிக்கு முன்னேறுமா என்பது குறித்து இன்றே தெரிய வரும். பாகிஸ்தான் vs இலங்கை போட்டி பல்லேகலேவில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 28ம் தேதி மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. நேற்று அதாவது 2026 பிப்ரவரி 27ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கடினமாகியுள்ளது.  அதன்படி, 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு வருவார்களா இல்லையா என்பது பாகிஸ்தான் அணியின் செயல்திறனை பொறுத்தே அமையும். இருப்பினும், இந்த போட்டியின் போது மழை பெய்தால், யாருக்கு அதிக நன்மை கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பு.. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் ‘டூ-ஆர்-டை’ போட்டியை எங்கு காணலாம்?

2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 6 சுற்றின் குரூப் பி புள்ளிகள் அட்டவணையில்​​இங்கிலாந்து ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில், இலங்கை அணி சுற்றில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. அதேநேரத்தில், நியூசிலாந்து தற்போது 3 புள்ளிகளையும் +1.390 நிகர ரன் ரேட்டை கொண்டு 2வது இடத்தில் உள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தானிடம் ஒரு புள்ளியுடன், -0.461 நிகர ரன் ரேட்டுடன் 3வது இடத்தில் உள்ளது.

மழை பெய்யும்போது யாருக்கு லாபம்?

பல்லேகலே மைதானத்தில் இன்று மழை பெய்தால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெறும். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்கும். அதே நேரத்தில் இலங்கை ஒரு புள்ளியுடன் போட்டியை விட்டு வெளியேறும். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்படும். மேலும் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும். எனவே, அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான் இலங்கையை எப்படியாவது தோற்கடித்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்.

பாகிஸ்தானின் அரையிறுதி சமன்பாடு:

2026 டி20 உலகக் கோப்பையில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 28ம் தேதி அரையிறுதியில் இடம் பெற, பாகிஸ்தான் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதேநேரத்தில், இலக்கை துரத்தினால் 13.1 ஓவர்களில் இலக்கை அடைய வேண்டும். பாகிஸ்தான் அவ்வாறு செய்யத் தவறினால், சிறந்த நிகர ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும்.

ALSO READ: பாகிஸ்தானுக்கு உயிர் கொடுத்த இங்கிலாந்து.. அரையிறுதிப் போரில் வெல்லப்போவது யார்?..

வானிலையைப் பொறுத்தவரை, பல்லேகலேவில் 2026 பிப்ரவரி 28ம் தேதியான இன்று தெளிவான வானம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மழை பெய்ய வாய்ப்பில்லை.

Follow Us