AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup: பாகிஸ்தானுக்கு உயிர் கொடுத்த இங்கிலாந்து.. அரையிறுதிப் போரில் வெல்லப்போவது யார்?..

T20 World Cup Pakistan's Semi-Final Qualification Scenario: ‘சூப்பர் 8’ பிரிவில் (குரூப் 2) மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்தைப் பிடிக்க பாகிஸ்தான் இன்னும் போட்டியில் நீடிக்கிறது. இலங்கை ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டதால், இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது.

T20 World Cup: பாகிஸ்தானுக்கு உயிர் கொடுத்த இங்கிலாந்து.. அரையிறுதிப் போரில் வெல்லப்போவது யார்?..
பாகிஸ்தானுக்கு உயிர் கொடுத்த இங்கிலாந்து
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Feb 2026 07:38 AM IST

2026 டி20 உலகக்கோப்பையில் (T20 World Cup 2026) பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. இதற்கு அந்த அணி இங்கிலாந்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்றைய தினம் (பிப்.27) நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி (England vs New zealand) 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்ட போதிலும், அவர்கள் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.

இதையும் படிக்க: ஒரே ஓவரில் 26 ரன்கள்.. விசித்திரமான நோ-பால்.. ரசிகர்களைக் கடுப்பேற்றிய துபே!

சூப்பர் 8’ பிரிவில் (குரூப் 2) மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்தைப் பிடிக்க பாகிஸ்தான் இன்னும் போட்டியில் நீடிக்கிறது. இலங்கை ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டதால், இங்கிலாந்து – நியூசிலாந்து போட்டி பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. நியூசிலாந்து அணி தனது சூப்பர் 8 போட்டிகள் அனைத்தையும் விளையாடி முடித்துவிட்டது. இப்போது நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் ஆகிய இரண்டில் ஒரு அணி மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும்.

புள்ளிகள் மற்றும் ரன் ரேட் நிலவரம்:

நியூசிலாந்து: 3 போட்டிகளில் 3 புள்ளிகள், நிகர ரன் ரேட் (NRR) +1.390.

பாகிஸ்தான்: 2 போட்டிகளில் 1 புள்ளி, நிகர ரன் ரேட் -0.461. பாகிஸ்தானுக்கு சூப்பர் 8ல் ஒரு போட்டி எஞ்சியுள்ளது.

இன்று (பிப்.28) நடைபெறவுள்ள கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி, நியூசிலாந்தின் ரன் ரேட்டை விட அதிக ரன் ரேட்டைப் பெற்றால், 3 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். இல்லையெனில், நியூசிலாந்து அணி தகுதி பெறும்.

பாகிஸ்தான் செய்ய வேண்டியது என்ன?

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை முந்த வேண்டுமானால் முதலில் பேட்டிங் செய்தால், இலங்கையை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இரண்டாவதாக பேட்டிங் செய்தால், இலக்கை 13.1 ஓவர்களுக்குள் எட்டி வெற்றி பெற வேண்டும்.

முடிந்த போட்டிகளில் நடந்தது என்ன?

முன்னதாக சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. அதன்பின் நடந்த போட்டிகளில், நியூசிலாந்து இலங்கையை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 புள்ளிகளைப் பெற்றது. ஆனால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்தின் வெற்றி பாகிஸ்தானுக்கு சாதகம்:

வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஒருவேளை நியூசிலாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தால், அவர்கள் 5 புள்ளிகளுடன் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருப்பார்கள். அவ்வாறு நடந்திருந்தால் பாகிஸ்தான் அதிகபட்சமாக 3 புள்ளிகளை மட்டுமே பெற முடியும் என்பதால் தொடரிலிருந்து வெளியேறியிருக்கும். ஆனால் இங்கிலாந்தின் வெற்றி, பாகிஸ்தானை இன்னும் அரையிறுதிப் போட்டியில் நீடிக்கச் செய்துள்ளது.

இதையும் படிக்க: T20 World Cup 2026 : ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது சிறந்த ரன் ரேட் கொண்ட அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

Follow Us