AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரசிகர்கள் மத்தியில் கவனம்பெறும் விஜய் சேதுபதியின் ‘காட்டான்’ வெப் சீரிஸ் டீசர்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

Muthu Engira Kaattan Web Series: விஜய் சேதுபதியின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் நேரடியாக ஓடிடி வெளியீட்டிற்காக தயாராகியுள்ள வெப் தொடர்தான் முத்து என்கிற காட்டான். இதன் டீசர் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுவருகிறது.

ரசிகர்கள் மத்தியில் கவனம்பெறும் விஜய் சேதுபதியின் ‘காட்டான்’ வெப் சீரிஸ் டீசர்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?
காட்டான் டீசர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Feb 2026 17:16 PM IST

தமிழ் சினிமாவில் படங்களில் கதாநாயகனாக கலக்கிவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் இறுதியாக “காந்தி டால்க்ஸ்” (Gandhi Talks) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகர்கள் அரவித் சுவாமி மற்றும் அதிதி ராவ் இணைந்து நடித்திருந்தனர். மௌன திரைப்படமாக உருவான இது, கடந்த 2026 ஜனவரி மாதத்தில் உலகமெங்கும் ரிலீசானது. வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வரிசையில் அடுத்தடுத்த புது படங்களிலும் இவர் ஒப்பந்தமாகி வருகிறார். மேலும் இவர் வெப் தொடரிலும் (Web Series)நடித்துள்ள நிலையில், அதன் டீசர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் புது வெப் தொடருக்கு “முத்து என்கிற காட்டான்” (Muthu Engira Kaattan) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வெப் தொடரை இயக்குநர் மணிகண்டன் (Manikandan) இயக்க, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதன் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது.மேலும் இதன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துவருகிறது.

இதையும் படிங்க: மிகவும் அருமையான படம் – தாய் கிழவி படத்தை பாராட்டிய இயக்குநர் சங்கர்!

காட்டான் வெப் தொடரின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி:

காட்டான் வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது:

இந்த காட்டான் தொடரில் விஜய் சேதுபதி முன்னணி நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருடன் நடிகர் ஜாக்கி ஷெராப் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். இந்த வெப் தொடரை காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன்தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆக்ஷன், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் வித்தியாசமான கதையில் இந்த் தொடர்நது தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: பிரித்விராஜ் சுகுமாரனின் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்தின் பெயர் சந்தோஷ் ட்ராஃபி – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இந்த வெப் தொடரை மணிகண்டன் இயக்க, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஓடிடியில்தான் முத்து என்கிற காட்டான் வெப் தொடரும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் சீரிஸ் வரும் 2026 மார்ச் 27ம் தேதியிலிருந்து ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us