Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

U19 World Cup 2026: அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா.. இன்று முதல் அண்டர் 19 உலகக் கோப்பை தொடக்கம்!

United States of America U19 vs India U19: 2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதே நேரத்தில் நேரடி ஸ்ட்ரீமிங் ஜியோஹாட்ஸ்டாரில் கிடைக்கும்.  19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் இந்திய போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், மீதமுள்ள போட்டிகள் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

U19 World Cup 2026: அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா.. இன்று முதல் அண்டர் 19 உலகக் கோப்பை தொடக்கம்!
இந்தியா U19 - அமெரிக்கா U19Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jan 2026 11:37 AM IST

ஐசிசி ஆண்கள் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை (U19 World Cup 2026) இன்று அதாவது 2026 ஜனவரி 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. போட்டியின் தொடக்க நாளில் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டி இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெறும் நிலையில், மற்ற இரண்டில் ஜிம்பாப்வே ஸ்காட்லாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் அணி தான்சானியாவையும் எதிர்கொள்கின்றன. 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் இந்திய அணியை (Indian U19 Cricket team) ஆயுஷ் மத்ரே வழிநடத்துகிறார்.அதே நேரத்தில் அனைவரின் கவனமும் வைபவ் சூர்யவன்ஷி மீது இருக்கும். காரணம் வைபவ் சூர்யவன்ஷி கடந்த 12 மாதங்களாக தனது அதிரடியான பேட்டிங்கால் U-19 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அசத்தினார்.

ALSO READ: ஜனவரி 15 முதல் U19 உலகக்கோப்பை.. இந்திய அணி எப்போது, யாருடன் மோதுகிறது?

இந்தியன் பிரீமியர் லீக்கில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் கேப்டன் ஆயுஷ் மத்ரே ஜோடி மூத்த வீரர்களுடன் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளது. இருவரும் ஐபிஎல்லில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடினாலும், போட்டிகளில் தங்கள் பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளனர். எனவே, இருவரும் தங்களது திறமைகளை 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக வெளிப்படுத்துவார்கள் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2026ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் எப்போது, ​​எங்கு நேரடியாகப் பார்க்கலாம்?

2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதே நேரத்தில் நேரடி ஸ்ட்ரீமிங் ஜியோஹாட்ஸ்டாரில் கிடைக்கும்.  19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் இந்திய போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், மீதமுள்ள போட்டிகள் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும். ஒரே நாளில் 3 போட்டிகள் நடைபெறுவதால், முக்கிய போட்டிகள் மட்டுமே ஸ்டார் ஸ்போர்ட்ஸில்  ஒளிபரப்பப்படும். அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்கு தொடங்கும்.

ALSO READ: இந்தியாவிற்கு எதிராக சதம்.. சம்பவம் செய்த மிட்செல்! நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2026 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பைக்கான இந்தியா-அமெரிக்கா அணிகள்:

19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணி:

ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), கனிஷ்க் சவுகான், கிலான் படேல், தீபேஷ் தேவேந்திரன், கிஷன் குமார் சிங், ஹெனில் மோகன், ஹர்ஷ் அம்த்ப்ரி பட்டேல், உத்ஹம். பங்கலியா.

19 வயதுக்குட்பட்டோர் அமெரிக்க அணி:

அம்ரிந்தர் கில், சாஹில் கார்க், அர்ஜுன் மகேஷ் (விக்கெட் கீப்பர்), உத்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா (கேப்டன்), அட்னிட் ஜாம்ப், அமோக் அரேபள்ளி, நிதிஷ் சுதினி, ஷிவ் ஷானி, ஆதித் கப்பா, சாஹிர் பாட்டியா, ரியான் தாஜ், அத்வைத் கிருஷ்ணா, சபரீஷ் பிரசாத், ரித்விக் அப்பி ஷிம்ப்.