Indian Head Coach: கவுதம் கம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணன்.. டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளர்? பிசிசிஐ அப்டேட்!
BCCI Secretary Devjit Saikia: கவுதம் கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால், டெஸ்ட் வடிவத்தில் இந்திய அணி சறுக்கலை சந்தித்தது. கடந்த 2025ம் ஜனவரி மாதம் முதல் இந்திய அணி மொத்தமாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில், இந்திய அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றியையும், 5 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது.
இந்திய அணியின் (Indian Cricket Team) தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து நிலவி வந்த அனைத்து ஊகங்களுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, கவுதம் கம்பீர் நீக்கம் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் அணியில் இடம் பெறுவது குறித்து பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன. இருப்பினும், இந்த செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், கம்பீரை தொடர்ந்து ஆதரிப்பதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் சைகியா என்ன கூறினார் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி எப்போது அறிவிக்கப்படும்? கிடைத்த முக்கிய அப்டேட்!




வதந்திகளை மறுத்த பிசிசிஐ:
Devjit Saikia on rumours of VVS Laxman as head coach 🚨 (ANI)
The reports currently circulating are entirely inaccurate and purely speculative. Despite being carried by some reputed media outlets, there is no truth to these claims. pic.twitter.com/ykafu1lkOH
— sports__life (@statecraft__) December 28, 2025
கடந்த சில நாட்களாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பதவி ஆபத்தில் இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. வி.வி.எஸ். லட்சுமணனுடன் வாரியம் பேசி வருவதாக கூறப்பட்டது. இருப்பினும், செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ உடனான உரையாடலில் பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா இந்தக் கூற்றுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக தேவ்ஜித் சைகியா கூறுகையில், ”வைரலாகி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் கற்பனையானவை. பெரிய செய்தி நிறுவனங்கள் கூட தவறான தகவல்களைப் பரப்புகின்றன. பயிற்சியாளரை மாற்றுவது குறித்து வாரியம் எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று கூறினார்.
2025ம் ஆண்டில் இந்திய அணியின் செயல்திறன்..
கவுதம் கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால், டெஸ்ட் வடிவத்தில் இந்திய அணி சறுக்கலை சந்தித்தது. கடந்த 2025ம் ஜனவரி மாதம் முதல் இந்திய அணி மொத்தமாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில், இந்திய அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றியையும், 5 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது. மேலும், 1 போட்டி டிராவில் முடிந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய 2-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது விமர்சனங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இருப்பினும், கவுதம் கம்பீரின் தலைமையின் கீழ் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அற்புதமாக செயல்பட்டு, சாம்பியன்ஸ் டிராபியில் சாம்பியன் பட்டத்தையும், டி20 கிரிக்கெட்டில் ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ALSO READ: கேப்டனாக சூர்யகுமார் யாதவ்.. இல்லாத கில்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
விவிஎஸ் லட்சுமண் பெயர் பரிசீலிக்கப்படுவது ஏன்..?
தலைமை பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) தலைவர் விவிஎஸ் லட்சுமண் அடிக்கடி பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கவுதம் கம்பீர் நியமிக்கப்படுவதற்கு முன்பே லட்சுமண் பிசிசிஐயின் முதல் தேர்வாக இருந்தார், ஆனால் ஊடக அறிக்கைகளின்படி, தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த நேரத்தில் லட்சுமண் இந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். இப்போதும் கூட, பயிற்சியாளர் பதவிக்காக லட்சுமணுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்பதை பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.