IND vs NZ 2nd ODI: இந்தியாவிற்கு எதிராக சதம்.. சம்பவம் செய்த மிட்செல்! நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
IND vs NZ 2nd ODI Highlights: இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற நிலையில் சமன் ஆனது.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான (IND vs NZ 2nd ODI) 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற நிலையில் சமன் ஆனது. ராஜ்கோட் கிரிக்கெட் ஸ்டேடியம் மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்கு துரதிர்ஷ்டவசமானதாக மாறியது. முதலில் பேட்டிங் செய்து 284 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, நியூசிலாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஒருதலைப்பட்சமாக தோல்வியடைந்தது. அற்புதமாக விளையாடி சதம் அடித்த டேரில் மிட்செல், நியூசிலாந்தின் வெற்றிக்கும் இந்திய அணியின் (Indian Cricket Team) தோல்விக்கும் முக்கிய காரணமாக இருந்தார். மிட்செல் தவிர, வில் யங் 87 ரன்கள் எடுத்து தனது அணியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
ALSO READ: 4 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம்.. ஒருநாள் தரவரிசையில் ’கிங்’ கோலி டாப்..!
டேரில் மிட்செல் அதிரடி சதம்:
New Zealand win the 2nd ODI in Rajkot and level the series 1⃣-1⃣
Scorecard ▶️ https://t.co/x1fEenI0xl#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/XZioDArcsG
— BCCI (@BCCI) January 14, 2026
285 ரன்கள் என்ற இலக்கை துரத்துவதற்காக நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவன் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோர் களத்தில் நின்றனர். அப்போது, ஹர்ஷித் ராணா கான்வேயை 16 ரன்களுக்கு வெளியேற்ற, மற்றொரு தொடக்க வீரரான ஹென்றி நிக்கோல்ஸை பிரசித் கிருஷ்ணா ஆட்டமிழக்க செய்தார். அடுத்ததாக உள்ளே வந்த டேரில் மிட்செல், வில் யங்குடன் இணைந்து 152 பந்துகளில் 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, போட்டியை இந்தியாவின் கையிலிருந்து முற்றிலுமாக புடுங்கினார். டேரில் மிட்செல் 96 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். இந்தியாவுக்கு எதிரான தனது கடைசி நான்கு ஒருநாள் இன்னிங்ஸ்களில் மூன்றில் சதம் அடித்துள்ளார்.
விக்கெட் எடுக்க தவறிய இந்திய பந்துவீச்சாளர்கள்:
டேரில் மிட்செல் மற்றும் வில் யங் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலும், இந்திய பந்து வீச்சாளர்களும் மோசமாக பந்து வீசினர். குறிப்பாக குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 82 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இது தவிர, முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ALSO READ: ROKO தோல்வி! மீட்டெடுத்த கே.எல்.ராகுல்.. நியூசிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு!
கே.எல். ராகுலின் சதம் வீண்:
இந்திய அணிக்காக கே.எல். ராகுல் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அவர் போராடும் அணியை நிலைநிறுத்தி, வெறும் 87 பந்துகளில் தனது எட்டாவது ஒருநாள் சதத்தை அடித்தார். ஐந்தாவது இடத்தில் வந்த கே.எல்.ராகுல் இந்திய அணிக்காக ரன் குவிந்திருந்தாலும், அவரது சதம் அணிக்கு வெற்றியை தேடி தரவில்லை. ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இந்தநிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகின்ர 2026 ஜனவரி 18ம் தேதி இந்தூரில் நடைபெறும். இதில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும்.