Under 19 World Cup 2026: ஜிம்பாப்வேக்கு பயம் காட்டிய இந்திய அணி.. சூப்பர் 6 சுற்றில் அசத்திய ஆயுஷ் மத்ரே படை!
Zimbabwe U19 vs India U19: 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்திய அணி ஜிம்பாப்வேயை 204 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான சூப்பர்-6 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 352 ரன்கள் எடுத்தது. 353 என்ற இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் (Under 19 World Cup 2026) இந்திய அணி ஜிம்பாப்வேயை 204 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான சூப்பர்-6 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 352 ரன்கள் எடுத்தது. 353 என்ற இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்திய அணி (Indian Cricket Team) இன்னும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. ஜிம்பாப்வேக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் விஹான் மல்ஹோத்ராவின் சதம் முக்கிய பங்கு வகித்தது. இதுமட்டுமின்றி, கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் உத்தவ் மோகன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டம் காட்டினர்.
இந்தப் போட்டியில், இந்தியா டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளே வந்தது. வழக்கம்போல் நட்சத்திர இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 30 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதேநேரத்தில், கடந்த போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு அரைசதம் அடித்த கேப்டன் ஆயுஷ் மத்ரே இந்த முறை வெறும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுமுனையை இறுக்கி பிடித்து கொண்ட விஹான் மல்ஹோத்ராவின் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு, 107 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். இவருக்கு உறுதுணையாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அபிக்யான் குண்டுவும் தன் பங்கிற்கு 61 ரன்களை திரட்டினார்.




ALSO READ: அபிஷேக்- சூர்யா சம்பவம்.. இந்திய அணி 3வது டி20யில் அபார வெற்றி!
பந்துவீச்சில் அற்புதம் செய்த கேப்டன் ஆயுஷ் மத்ரே:
For his superb century, Vihaan Malhotra is named the Player of the Match 🏅
India U19 register a commanding victory of 204 runs over Zimbabwe U19 👏
Scorecard ▶️ https://t.co/juFENSDomr#U19WorldCup pic.twitter.com/gH89E5dSgE
— BCCI (@BCCI) January 27, 2026
கேப்டன் ஆயுஷ் மத்ரே பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், பந்துவீச்சில் பல அற்புதங்களை செய்தார். கேப்டன் ஆயுஷ் மத்ரே வெறும் 4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், உத்தவ் மோகன் தன் பங்கிற்கு 3 விக்கெட்களையும், ஆர்.எஸ். அம்ப்ரிஸ். ஹெனில் படேல் மற்றும் கிலான் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ALSO READ: ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு.. வெளியேறும் ஹர்திக்.. 4வது டி20யில் இந்திய அணி எப்படி?
தொடர்ந்து 4வது வெற்றி:
2026ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் நான்காவது வெற்றி இதுவாகும். ஒரு கட்டத்தில், ஜிம்பாப்வே 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் அங்கிருந்து, இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்தினர். இதன் காரணமாக, ஜிம்பாப்வேயின் கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 6 ரன்களுக்கு இழந்தது. இதன்மூலம், 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் சூப்பர் 6 சுற்றில் இந்திய அணி 204 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.