Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Jan 2026 21:59 PM IST

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக உடனடியாக அமல்படுத்தக் கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ஏற்கெனவே, தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்று 4வது நாளாக வேலை நிறுத்தம் நடப்பதால், பணபரிவர்த்தனை சேவைகள் பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. தற்போது வங்கிகள், ஒவ்வொரு மாதத்திலும் முதல், 3வது மற்றும் 5வது சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக இயங்குகின்றன. இதை மாற்றி, அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரி, வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.