சத்தீஸ்கர் மாநிலத்தில் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் ஒரு மனதை உருக்கும் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கபிர்தம் மாவட்டத்தைச் சேர்ந்த சம்லு மார்கம் என்ற நபர், தனது மனைவியை காப்பாற்றுவதற்காக செய்த தியாகம் பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. சம்லுவின் மனைவி தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தனது மனைவியை மருத்துவ சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் அழைத்துச் சென்று வருகிறார்.