ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த இளம் பெண் அதிகாரி ஒருவர், இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் புதிய வரலாறு படைக்க உள்ளார். 26 வயதான சிம்ரன் பாலா, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், முழுக்க ஆண்கள் அடங்கிய மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணியை தலைமை தாங்கி வழிநடத்த உள்ளார். இதற்கு முன், சில குடியரசு தின அணிவகுப்புகளில் பெண் அதிகாரிகள் அணிகளை வழிநடத்தியிருந்தாலும், 140க்கும் மேற்பட்ட ஆண் வீரர்களைக் கொண்ட அணியை ஒரு பெண் அதிகாரி தலைமை தாங்குவது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.