கடந்த ஒரு ஆண்டில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து, சுமார் 80% வருமானத்தை வழங்கியுள்ளது. ஒரு ஆண்டு முன்பு ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று அது ரூபாய் 1.8 லட்சமாக மாறியிருக்கும். இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், தவறான முதலீட்டு முறையைத் தேர்ந்தெடுத்தால், வரி காரணமாக 30 முதல் 50% வரை லாபம் குறையலாம் என நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.