U19 World Cup 2026 Final: இறுதிப்போட்டியில் இறங்கி குத்திய சூர்யவன்ஷி.. 55 பந்துகளில் சதம் அடித்து சம்பவம்!
Vaibhav Sooryavanshi Fastest Century: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி வெறும் 55 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான (U19 World Cup 2026) ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்று வருகிறது. இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். இருப்பினும், நான்காவது ஓவரில் கடந்த போட்டியில் சதம் அடித்த ஆரோன் ஜார்ஜ் இந்த போட்டியில் வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு பின்னடைவு என்று நினைத்தபோது, இங்கிலாந்து அணிக்கு எதிராக மற்றொரு தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) வெறும் 55 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து, அடுத்த 16 பந்துகளில் 150 ரன்களை கடந்தார்.
ALSO READ: அரையிறுதிக்கு செல்லப்போகும் அணி எது..? மோதும் இந்தியா U19 -பாகிஸ்தான் U19..!




U19 உலகக் கோப்பையில் சூர்யவன்ஷி முதல் சதம்:
Vaibhav Sooryavanshi blasts his way to a ton in the #U19WorldCup Final 💯
Tournament broadcast details 👉 https://t.co/jKX6xmmOJQ pic.twitter.com/Q6YIsy9m6V
— ICC (@ICC) February 6, 2026
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி 55 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இது வைபவ் சூர்யவன்ஷி இளைஞர் ஒருநாள் கிரிக்கெட்டின் 4வது சதமாகும். மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையையும் வைபவ் படைத்தார். தற்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு 14 வயது மற்றும் 316 நாட்களே ஆகிறது.
அதிவேக சதம்:
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 55 பந்துகளில் சதம் அடித்து, அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்.
அதிக சிக்ஸர்கள்:
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 5 சிக்ஸர்கள் அடித்ததன்மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பரைத்தார். முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா வீரர் டெவால்ட் ப்ரூவிஸ் 18 சிக்ஸர்களை அடித்திருந்தார். தற்போது, 20 சிக்ஸர்களுக்கு மேல் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனையை முறியடித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மட்டும் வைபவ் சூர்யவன்ஷி 15 சிக்ஸர்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: 311 ரன்களை எளிதாக எட்டிய இந்திய U19 அணி.. பைனலுக்கு முன்னேறி அசத்தல்..!
200 ரன்களை மிஸ் செய்த வைபவ் சூர்யவன்ஷி:
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யவன்ஷி அவுட்டானபோது, இந்திய அணி 25.3 பந்துகளில் 251 ரன்கள் குவித்திருந்தது.