AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

U19 உலகக் கோப்பை 2026: இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

U19 உலகக் கோப்பை 2026 தொடரில் நடைபெற்ற முக்கிய போட்டியில் India U19, Pakistan U19 அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, U19 World Cup 2026 தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

U19 உலகக் கோப்பை 2026: இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Feb 2026 20:55 PM IST

U19 உலகக் கோப்பை 2026 தொடரில் நடைபெற்ற முக்கிய போட்டியில் இந்தியா U19, பாகிஸ்தான் U19 அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, U19 உலகக் கோப்பை 2026 தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் U19 அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டி எந்த அணி அரையிறுதிக்கு செல்லும் என்பதை முடிவு செய்யும் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

U19 உலகக் கோப்பை 2026 தொடரில் நடைபெற்று வரும் பரபரப்பான  நாக் அவுட் போட்டியில் இந்தியா U19 மற்றும் பாகிஸ்தான் U19  அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் கடினமான பிட்சில் விளையாடிய இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 68 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க : T20 World Cup: டி20 உலகக் கோப்பையில் மிகவும் வெற்றிக்கரமான கேப்டன் யார்? முதலிடத்தை மிஸ் செய்த தோனி, ரோஹித்!

U19 உலகக் கோப்பை குறித்து பிசிசிஐ பதிவு

 

4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா

ஆரம்பத்தில் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்டை இழந்த பிறகு, இந்திய அணிக்கு சிறிய சரிவு ஏற்பட்டது. குறிப்பாக 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்து பெரும் அதிர்ச்சியை அளித்தது. பின்னர் வேதாந்த் திரிவேதி மற்றும் விஹான் மல்ஹோத்ரா இணைந்து 62 ரன்கள் சேர்த்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் விஹான் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய வேதாந்த் அரை சதம் அடித்தார்.  இதனையடுத்து இந்திய அணி 252 ரன்களை குவித்தது.

இதையும் படிக்க : Team India T20 World cup Victory: எம்.எஸ்.தோனி முதல் ரோஹித் சர்மா வரை.. 2 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற கதை!

அதனைத் தொடர்ந்து33.3 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஹம்சா ஜஹூர் மற்றும் உஸ்மான் கான் ஆகியோர் நல்ல துவக்கம் தந்தனர். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். அவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததும் ஆட்டம் இந்தியா பக்கம் சென்றது. பாகிஸ்தானால் 33.3 ஓவர்களில் 253 ரன்கள் எடுக்க முடியவில்லை. இதனையடுத்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Follow Us