AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: மோதும் இந்தியா-தென்னாப்பிரிக்கா.. பயிற்சி ஆட்டம் எப்போது, எங்கே..?

T20 World Cup Ind Vs SA: இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைக்கும் நோக்கத்துடன் களமிறங்கும். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், 3வது முறையாக டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும். இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தும் உலகின் முதல் அணி என்ற பெருமையை இந்தியா படைக்கும்.

T20 World Cup 2026: மோதும் இந்தியா-தென்னாப்பிரிக்கா.. பயிற்சி ஆட்டம் எப்போது, எங்கே..?
இந்தியா-தென்னாப்பிரிக்காImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Feb 2026 20:11 PM IST

2026 டி20 உலகக் கோப்பைக்கான (2026 T20 World Cup) கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. வருகின்ற 2026 பிப்ரவரி 7 ம் தேதி தொடங்கும் இந்த முக்கிய போட்டிக்கு முன்னதாக, அனைத்து அணிகளும் பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த பயிற்சி போட்டிகளில் இந்திய அணி (Indian Cricket Team) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே பயிற்சிப் போட்டியை விளையாடும். இந்தப் போட்டி ஒரு பயிற்சிப் போட்டியாக மட்டுமல்லாமல், இந்தியா தனது விளையாடும் பதினொன்றையும், உத்தியையும் சோதிக்க ஒரு முக்கியமான வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் விலகும் பாகிஸ்தான்.. நிலைப்பாட்டை முன்வைத்த பிசிசிஐ!

இந்தியா-தென்னாப்பிரிக்கா பயிற்சி போட்டி எப்போது நடைபெறும்?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இந்த பயிற்சி போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும். 2026 உலகக் கோப்பைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெறும் இந்த போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

போட்டியை எங்கே நேரடியாகப் பார்க்கலாம்?

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான பயிற்சி போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
அதேசமயம், ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடி ஸ்ட்ரீமிங்கிலும் நேரடியாக கண்டுகளிக்கலாம். இந்தியா – தென்னாப்பிரிக்கா போன்ற முக்கிய அணிகளின் பிற ஐ.சி.சி பயிற்சி போட்டிகளும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து போட்டிகளின் சிறப்பம்சங்களையும் ஐ.சி.சி அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளங்களில் காணலாம்.

முழு நம்பிக்கையுடன் உள்ள இந்திய அணி:

சூர்யகுமார் யாதவின் தலைமையில், இந்திய அணி நல்ல ஃபார்மில் உள்ளது. சமீபத்தில் நடந்த டி20 தொடரில் இந்தியா நியூசிலாந்தை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. இது இந்திய அணியின் மன உறுதியை கணிசமாக உயர்த்தியுள்ளது. அந்தத் தொடரில், அபிஷேக் சர்மாவின் ஆக்ரோஷமான பேட்டிங், இஷான் கிஷனின் அதிரடி பேட்டிங், ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்ட் செயல்திறன் மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் துல்லியமான பந்துவீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பழிவாங்குமா தென்னாப்பிரிக்கா அணி..?

இந்திய அணிக்கு எதிரான போட்டி தென்னாப்பிரிக்காவிற்கு வெறும் பயிற்சி ஆட்டமாக மட்டும் இருக்காது. 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு, தென்னாப்பிரிக்கா அணி தன்னை நிரூபிக்க முயற்சிக்கும். எனவே, இந்தப் போட்டி கடினமானதாகவும் உற்சாகமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறாவிட்டால் ரூ.4500 கோடி இழப்பு – என்ன காரணம்?

வரலாற்றை படைக்கும் நோக்கத்துடன் களமிறங்கும் இந்தியா:

இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைக்கும் நோக்கத்துடன் களமிறங்கும். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், 3வது முறையாக டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும். இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தும் உலகின் முதல் அணி என்ற பெருமையை இந்தியா படைக்கும். அதேநேரத்தில், சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா படைக்க வாய்ப்புள்ளது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு முந்தைய இந்த பயிற்சிப் போட்டி இந்திய அணியின் நோக்கங்களையும் மன உறுதியை உண்மையிலேயே வெளிப்படுத்தும்.

Follow Us