Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரசவமா? பயத்தில் மர்மமான இளம்பெண்.. அடுத்து என்ன? ஈரோட்டில் நடந்த சம்பவம்!

Erode Crime News : ஈரோடு மாவட்டத்தில் பிரசவத்திற்கு பயந்து இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்கள் காணாமல் போன நிலையில், அதன்பிறகு அவர் வீடு திரும்பி இருக்கிறார். இதுபோன்று ஏன் அந்த பெண் செய்தார் என்ற விவரத்தை பார்ப்போம்.

பிரசவமா? பயத்தில் மர்மமான இளம்பெண்.. அடுத்து என்ன? ஈரோட்டில் நடந்த சம்பவம்!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 19 Jul 2025 21:10 PM

ஈரோடு, ஜூலை 19 : ஈரோடு மாவட்டத்தில் பெண் ஒருவர் பிரசவத்திற்கு பயந்து மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களாக தலைமறைவாகி இருந்த பெண்ணை, அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஷேவந்தி. அவரது கணவர் சந்திரன். இந்த தம்பதிக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆனதாக தெரிகிறது. இந்த நிலையில், பெண் ஷேவந்தி கர்ப்பமாக இருந்துள்ளார். அவருக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. இதற்கு பிரசவத்திற்கு நாளும் நெருங்கிவிட்டது. இந்த நிலையல், பெண் ஷேவந்தி பிரசவத்திற்கு பயந்து 10 நாட்கள் தலைமறைவாகி இருக்கிறார். பெண் ஷேவந்திக்கு 2025 ஜூலை 7ஆம் தேதி பிரசவம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் பிரசவத்திற்கு பயந்து தலைமறைவாகி இருக்கிறார். முன்னாக, மருத்துவர்கள் குழுவும் அவரை சமாதானப்படுத்தி இருந்தது.

ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார. தனக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றிருக்கிறார். ஆனால், அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், சந்திரன் குடும்பத்தினர் செவந்தி காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், பெண் செவந்தி தாயார் வீட்டில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து தாளவாடி விவசாயிகள் அறக்கட்டளையின் தலைவர் எஸ். கண்ணையன் பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

Also Read : ராமநாதபுரம்: பிள்ளைகள் முன்பு வீடு புகுந்து பெண் கொலை: குடும்ப மோதலா? வேறு காரணமா?

பிரசவத்திற்கு பயந்து இளம்பெண் எடுத்த முடிவு

அங்கு தாய் நாகியம்மாவையும், சகோதரி மாதேவியையும் சந்தித்தார். அப்போது, வீட்டில் பிரசவம் பார்த்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விவரித்தார். ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு, செவந்தி மருத்துவமனைக்கு வர சம்மதம் தெரிவித்து இருக்கிறார். மேலும், செவந்தி மருத்துவமனைக்கு வரவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரி கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் மருத்துவமனை வருகைக்கு சம்மதித்தனர், மேலும் சுகாதாரக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள் அவரது வீட்டிற்குச் சென்று, அவரது இரத்த அழுத்தத்தை சரிபார்த்து, மேலும் பரிசோதனைக்காக காலை 11:30 மணியளவில் தாளவாடியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதனைக்குப் பிறகு, எந்த நேரத்திலும் பிரசவம் தொடங்கலாம் என்பதால் உடனடியாக அனுமதிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனை அடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து செவந்தியின் தாய் கூறுகியல், “என்னுடைய மூத்த மகள் ஒருவருக்கும் பிரசவத்திற்கு பிறகு, ரத்தக்கசிவு ஏற்பட்டது.

Also Read : மதுரையில் வரதட்சணை கொடுமை: அடித்து துன்புறுத்திய காவலர் கணவர் கைது..!

இது எங்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால், தனது மகளை கர்நாடகாவின் குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்க வைத்தேன். மருத்துவமனை பிரசவங்கள் பெரும்பாலும் சிக்கலானவை என கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த பயத்தில் இதுபோன்று செய்தேன்.