Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மீண்டும் வரதட்சணை.. பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவன்.. பகீர் பின்னணி!

Madurai Woman Dowry Harassment Case : மதுரையில் ஆசிரியர் ஒருவர் தனக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார். வரதட்சணை கொடுமையால் கணவர் தாக்கியதில், அப்பெண் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் வரதட்சணை.. பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவன்.. பகீர் பின்னணி!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 18 Jul 2025 16:23 PM

மதுரை, ஜூலை 18 : மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கேட்டு கணவர் தாக்கியதாக அப்பெண் அப்பன்திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த பெண்ணின் கணவர் அப்பன் திருப்பதி காவல்நிலைய காவலர் பூபாலன் என்று தெரியவந்துள்ளது. பூபாலன், அவரது தாய் உட்பட 4 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் பூபாலன். இவரது மனைவி தங்கபிரியா. தங்கபிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கணவர் பூபாலன், தங்கபிரியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. திருமணத்தின்போது, 60 சவரன் நகை, லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், கூடுதல் நகை மற்றும் பணம் வரதட்சணையாக வேண்டும் என காவலர் பூபாலன் தனது மனைவியிடம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

Also Read : திருநெல்வேலியில் பள்ளி மாணவன் விபரீத முடிவு… பேருந்துகள் தீக்கிரை..! போராட்டத்தால் பரபரப்பு

இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் பூபாலன் தனது மனைவி தங்க பிரியா அடித்துள்ளதாக தெரிகிறது. மேலும், தங்கபிரியாவை தொடர்ந்து சித்ரவதையும் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதில், படுகாயம் அடைந்த பெண் தங்க பிரியாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், கணவர் பூபாலன், சாத்தூர் வட்டத்தில் போக்குவரதது காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பூபாலனின் தந்தை செந்தில் குமாரன் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read : கிட்னி விற்பனை மோசடி.. நாமக்கல்லில் அரங்கேறும் சம்பவம்.. அதிரவைக்கும் பின்னணி!

திருமணத்தின்போதே 60 சவரன் நகை, பைக், சீர்வரிசை பொருட்கள் கொடுத்ததாக தங்கபிரியா கூறியுள்ளார். மேலும், தற்போது பல லட்ச ரூபாய் மதிப்பில் வீட்டு கட்டி தர வேண்டும் எனவும், நகை கூடுதலாக வேண்டும் எனவும் பூபாலன் தினமும் டார்ச்சர் செய்து வருவதாக தங்கபிரியா குற்றச்சாட்டியுள்ளார். இதனை அடுத்து, கணவர் பூபாலன், மாமனார் செந்தில் குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனித ஆகியோர் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  இவர்கள் பிடிக்க தனிப்படை  போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.