Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏன் லேட்டா வந்தீங்க? கேள்வி கேட்ட ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய மாணவர்கள்.. சிவகாசியில் அதிர்ச்சி

Sivakasi Crime News : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆசிரியரை மாணவர்கள் மது பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆசிரியர் சண்முகம் சுந்தரம் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாமதமாக வந்த மாணவர்களை, ஆசிரியர் கேட்டதால், மாணவர்கள் இதுபோன்று செய்துள்ளனர்.

ஏன் லேட்டா வந்தீங்க? கேள்வி கேட்ட ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய மாணவர்கள்.. சிவகாசியில் அதிர்ச்சி
ஆசிரியர்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Jul 2025 13:53 PM

சிவகாசி, ஜூலை 17 : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆசிரியரை மாணவர்கள் மது பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் தாக்கியதில், ஆசிரியர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியாக சண்முக சுந்திரம் (47) பணியாற்றி வருகிறார். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர். இந்த நிலையில், கடந்த வாரம் சண்முக சுந்தரம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, 12ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் தாமதாக வந்ததை அவர் கவனித்திருக்கிறார்.

கேள்வி கேட்ட ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய மாணவர்கள்

இதனால், அவர்களிடம் ஏன் தாமதமாக பள்ளிக்கு வருகிறீர்கள் என கேட்டிருக்கிறார். அப்போது, மாணவர்கள் மது அருந்தியதை ஆசிரியர் சண்முக சுந்தரம் கண்டுபிடித்தார். இதனை அடுத்து, நான்கு மாணவர்களையும் தலைமை ஆசிரியர் அலுவலகத்திற்கு தன்னுடன் வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், ஆத்திரத்தில் அந்த மாணவர்கள் ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர். இதனால், சண்முக சுந்தரம் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அங்கிருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also Read : திருமணமான ஒரு மாதம்.. மனைவி, தாயை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்.. பகீர் பின்னணி!

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு சிறுவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இரண்டு மாணவர்கள் கைது செய்யது சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சண்முக சுந்தரத்தின் முகத்தில் இரண்டு தையல்கள் போடப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் விருதுநகர் மாவட்ட எஸ்பி டி. கண்ணன் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக திருத்தங்கல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read : சிவகங்கை அஜித் குமார் மரணம்.. விசாரணையை துவங்கிய சிபிஐ.. அடுத்து என்ன?

சமீப காலங்களில் மாணவர்கள் பள்ளிகளில் சமீப நாட்களில் பள்ளிகளில் சாதிய மோதல் நடந்து வருகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கத்தி, அரிவாளுடன் வருவதாகவும் தெரிகிறது. அண்மையில் கூட, நெல்லையில் பள்ளி வளாகத்தில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, பள்ளிகளில் இதுபோன்ற மோதல்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.