Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்.. விபரீத முடிவு எடுத்த மருமகள்.. சோக சம்பவம்!

Father in Law Misbehave with Daughter in Law | வீட்டில் தனியாக இருந்த மருமகளிடம் மானமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், மனமுடைந்த மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்.. விபரீத முடிவு எடுத்த மருமகள்.. சோக சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Jul 2025 08:05 AM

ராமநாதபுரம், ஜுலை 24 : ராமநாதபுரத்தில் (Ramanathapuram) வீட்டில் தனியாக இருந்த தன்னிடம் தனது மாமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி அந்த பெண் தீ வைத்துக்கொண்டு நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்

ராமநாதபுரம் அடுத்த கமுதி பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் தனது கணவர், குழந்தைகளுடன் மாமனார் மற்றும் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தனியாக இருந்த அந்த பெண்ணிடம் அவரது 65 வயது மாமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண், அது குறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சிவகங்கை: தம்பதி ஒரே சேலையில் விபரீத முடிவு.. அனாதையான 3 குழந்தைகள்..!

இதனை அறிந்த அந்த பெண்ணின் மாமனார் வெளியூருக்கு சென்றுவிட்டுள்ளார். அவர் ஊரில் இருந்து வந்ததும் அவரை கண்டிப்பதாக அந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார். ஆனால், மன வருத்தம் தீராத அந்த இளம்  பெண் இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொளுத்திக்கொண்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாமியார் குறித்து மரண வாக்குமூலம் அளித்த மருமகள் – வலைவீசி தேடும் போலீஸ்

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள பெண்ணின் மாமனாரை வலை வீசி தேடி வருகின்றனர். தற்கொலை செய்துக்கொண்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தனது மாமனார் தன்னை பாலியல் தொந்தரவு செய்தது குறித்து வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மாமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், தாயை இழந்து இரண்டு குழந்தைகள் தவித்து வருவது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.