Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2 குழந்தைகளை கொன்ற அபிராமி.. சாகும் வரை ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு

Kanchipuram Crime News : திருமணம் மீறிய உறவுக்காக இரண்டு குழந்தைகளை கொன்ற பெண் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2018ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு, தற்போது குற்றவாளி அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்திற்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

2 குழந்தைகளை கொன்ற  அபிராமி.. சாகும் வரை ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு
பெண் அபிராமி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 25 Jul 2025 05:46 AM

காஞ்சிபுரம், ஜூலை 24 : திருமணத்தை மீறிய உறவில் இரண்டு குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கு, பிரியாணி கடை நடத்தி வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2018ஆம் ஆண்டு குழந்தைகளை கொன்று மீனாட்சி சுந்தரத்துடன் கேரளா செல்ல முயன்றபோது, இருவரும் கைதாகினர். இந்த நிலையில், இந்த வழக்கில் இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து, அபிராமி நீதிமன்றத்திலேயே கதறி அழுதுள்ளார். குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அபிராமி அடிக்கடி டிக்டாக் ஆப்பில் வீடியோ பதவிட்டு வந்தார்.

இதனால், அப்போது எல்லாம் மிகவும் பிரபலமாக இருந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுதந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மீனாட்சி சுதந்தரம் பிரியாணி கடை நடத்தி வந்தார். அபிராமிக்கு இவருடன் தான் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. அபிராமி, சுதந்தரத்துடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த கணவர் விஜய், அடிக்கடி அபிராமியை கண்டித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

Also Read : வரதட்சணை கொடுமை.. மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவன்.. கைது செய்த போலீஸ்!

வழக்கின் பின்னணி

இதனால், ஆத்திரம் அடைந்த அபிராமி, கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படியே, 2018ஆம் ஆண்டு கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரை அதிகளவு கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். ஆனால், இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இது தொடர்பாக விஜய் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கொடூர குற்றத்தை செய்த அபிராமி, மீனாட்சி சுந்தரத்துடன் கேரளாவுக்கு தப்பி செல்ல முயன்றார். அப்போது, போலீசார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அபிராமி மற்றும் சுந்தரத்தை கைது செய்தனர்.

அபிராமிக்கு  சாகும் வரை ஆயுள் தண்டனை

இந்த வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு, 2025 ஜூலை 24ஆம் தேதியான இன்று நீதிபதி செம்மல் தீர்ப்பு அளித்துள்ளார். அப்போது, ஏற்கனவே ஏழு ஆண்டுகள் சிறையில் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க கோரி அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.

Also Read : சிவகங்கை: தலையை துண்டித்து விவசாயி கொல்லப்பட்ட கொடூரம்: இளைஞர் கைது!

அதன்படி, இருவரும் குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அபிராமி மற்றும் சுந்தரம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் வாழ்நாள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதற்கிடையில், நீதிமன்றத்திற்கு துப்பட்டவால் முகம் முழுவதும் மூடி வந்த அபிராமியின் செயலை கண்டித்த நீதிபதி, ஏன் குற்றவாளிக்கு துப்பட்டாவை வழங்கினார்கள் இதனால் அவர்கள் கழுத்தை நெரித்து தற்கொலை செய்ய நேரிடும். இதனை அனுமதிக்க கூடாது என காவலர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.