Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாமக தலைவர் பதவி விவகாரம்…ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு!

Pmk Ramdoss File Case: பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இது தொடர்பான முழு விவரத்தை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாமக தலைவர் பதவி விவகாரம்…ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு!
ராமதாஸ் தொடுத்த வழக்கு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 02 Dec 2025 18:12 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஒராண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன்படி, இதில், அன்புமணி தரப்பை சேர்ந்தவர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் தரப்பை சேர்ந்தவர்களை அன்புமணி நீக்குவதுமாக இருந்து வருகிறது. ஒரு கட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கு சொந்தம், மாம்பழம் சின்னம் யாருக்கு சொந்தம் என்ற அளவுக்கு மோதல் போக்கு வழுத்தது. அதன்படி, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

பாமக, மாம்பழம் யாருக்கு சொந்தம்

இதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தான் கட்சியின் தலைவர் என்றும், அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும், அவர் குறிப்பிடும் நபர் தான் கட்சியின் தலைவர் என்றும் அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இதனால், அன்புமணி மற்றும் ராமதாஸ் என இரு அணிகளாக கட்சியினர் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கட்சியின் தலைவர் விவகாரம் தொடர்பாக அன்புமணி தரப்பு டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்திருந்தது. இதே போல, ராமதாஸ் தரப்பிலும் சில ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: ‘டிச.15க்குள் இறுதி முடிவு’.. இபிஎஸ்-க்கு கெடு; ஓபிஎஸ் தலைமையில் உருவாகும் புதிய கட்சி?

அன்புமணிக்கே பாமக சொந்தம்

அந்த ஆவணங்களை ஆராய்ந்த தலைமை தேர்தல் ஆணையம், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியை அங்கீகரிப்பதாகவும், அன்புமணி தலைமையின் கீழ் இருப்பது தான் உண்மையான பாட்டாளி மக்கள் கட்சி என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த முடிவை ஏற்க மறுத்த ராமதாஸ் தரப்பு இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திப்பதாக தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க: 6.16 கோடி பேருக்கு SIR படிவங்கள் விநியோகம்.. கால நீடிப்பு கிடையாது – தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டவட்டம்..

தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக ராமதாஸ் வழக்கு

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அந்த மனுவில், தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை தலைமை தேர்தல் ஆணையம் முறையாக ஆராயாமல், அன்புமணி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட போலியான ஆவணங்களை வைத்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது. எனவே, இது தவறு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.