Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘டிச.15க்குள் இறுதி முடிவு’.. இபிஎஸ்-க்கு கெடு; ஓபிஎஸ் தலைமையில் உருவாகும் புதிய கட்சி?

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் நோக்கமே, அதிமுகவில் தான் இழந்த பதவி, உரிமையை மீட்டெடுப்பதாக இருந்தது. எனினும், இதனால் தனக்கு அரசியல் செல்வாக்கு கிடைக்காத நிலையில், தற்போது தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்திற்கு வந்துவிட்டதாக தெரிகிறது.

‘டிச.15க்குள் இறுதி முடிவு’.. இபிஎஸ்-க்கு கெடு; ஓபிஎஸ் தலைமையில் உருவாகும் புதிய கட்சி?
ஓ.பன்னீர்செல்வம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 Nov 2025 08:03 AM IST

சென்னை, நவம்பர் 25: வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்றும், இல்லையென்றால் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், அமமுக என்ற தனிக்கட்சியை தொடங்கிய நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வமும் தனது உரிமை மீட்புக்குழு அமைப்பை கட்சியாக தொடங்க உள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் அதிமுக ஒருங்கிணைப்பு என்பது இனி சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அந்தவகையில், சென்னை வேப்பேரியில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில்  நேற்று மாலை ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு’ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஓபிஎஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள், அதிமுக தலைமைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

மேலும் படிக்க: கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!!

ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி:

அதோடு, அந்த கூட்டத்தில் பேசிய வைத்திலங்கம், இன்னும் ஒரு மாதத்திற்கு உள்ளாக அதிமுக இணையவில்லை என்றால் ஓ. பன்னீர்செல்வத்தின் தலைமையில் புதிய கட்சி உருவாக்கப்படும் என்று பேசி சர்ச்சை ஏற்படுத்தினார். தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “அதிமுக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை பார்த்து கண்ணீர் விடும் நிலை உள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், அடுத்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி இனியாவது திருந்த வேண்டும், அவ்வாறு திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என்றும் எச்சரித்தார். தொடர் தோல்வி, தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவுகள் போன்ற நடவடிக்கைகளால், அதிமுக மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது. அதனால், எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்துப் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க: நவ.26 அன்று வங்கக்கடலில் உருவாகும் புயல்.. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை..

சுயேட்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ்:

முன்னதாக, கடந்த 2024ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தார். அப்போது அவரை தாமரைச் சின்னத்தில் போட்டியிடுமாறு பாஜக வற்புறுத்தியது. எனினும், அதனை ஏற்காத அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறாவிட்டாலும், அதிமுக வேட்பாளருக்கு கடும் போட்டியாக அமைந்து இரண்டாவது இடைத்தை பெற்றார். தொடர்ந்து, பாஜகவுடன் நல்ல நட்புறவில் இருந்து வந்த .பன்னீர்செல்வம், அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதும், அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகல்:

இதற்கு முக்கிய காரணமாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும், தனது அழைப்புகளை ஏற்கவில்லை என்றும் போனில் ஆதாரத்துடன் காண்பித்தார். அதேபோல், பாஜக கூட்டணியில் இருந்த டிடிவி தினகரனும் விலகினார். ஏனெனில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அதனால், இவர்கள் இருவரும் பாஜக கூட்டணியில் பயணித்தனர். தொடர்ந்து, தலைமை மாற்றப்பட்டு வரும் மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதோடு, இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் அறிவிக்கப்பட்டதால், ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதிருப்தியடைந்ததாதக தெரிகிறது. இதனால், இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினர்.

புதிய கட்சி தொடங்கினால் யாருடன் கூட்டணி?

இதனிடையே, சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிய கட்சியை தொடங்கும் முடிவில் இருக்கிறார் .பன்னீர்செல்வம். இதனால், அவரது அடுத்த கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. குறிப்பாக அவர் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? அல்லது விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.