Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேட், விசில், பந்து.. பொது சின்னம் கோரும் த.வெ.க.. இந்த சின்னங்கள் கோர என்ன காரணம்?

TVK Election Symbol: தேர்தலுக்கு மிக முக்கியமான ஒன்றான சின்னம் தேர்ந்தெடுப்பதில் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் பேட், விசில், பந்து ஆகியவை அடங்கும்.

பேட், விசில், பந்து.. பொது சின்னம் கோரும் த.வெ.க.. இந்த சின்னங்கள் கோர என்ன காரணம்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Nov 2025 10:13 AM IST

நவம்பர் 20, 2025: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பொதுச் சின்னம் கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அதற்கான தயாரிப்புகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. ஒரு பக்கம் ஆலோசனைக் கூட்டங்கள், நிர்வாகிகளை நியமித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதேபோல் தேர்தலுக்கு மிக முக்கியமான ஒன்றான சின்னம் தேர்ந்தெடுப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் படிக்க: கோவைக்கும், மதுரைக்கும் “NO METRO”.. தமிழ்நாட்டை பழிவாங்குவதா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!!

சின்னம் தேர்வு செய்வதில் முனைப்பு காட்டும் தவெக:

தமிழக வெற்றி கழகம் தொடங்கியதிலிருந்தே அதன் இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தலை சந்திப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலை சந்திப்பதற்கான மிக முக்கிய அம்சமாக கட்சியின் சின்னம் பார்க்கப்படுகிறது. கட்சியின் சின்னம்தான் மக்கள் மனதில் எளிதாக பதிய வேண்டிய ஒன்று; அப்போதுதான் வாக்களிக்கும் போது மக்களுக்கு சுலபமாக தேர்வு செய்ய முடியும். புதிய கட்சி என்பதால் சின்னம் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பராமரிப்பு பணிகள் காரணமாக 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து.. இயக்கப்படும் 17 சிறப்பு ரயில்கள்.. முழு விவரம்..

இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்திற்கு பொதுச்சின்னம் கோரி, அந்தக் கட்சியின் இணைப்பு பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார், மாநில நிர்வாகிகள் புஷ்பவனம் குப்புசாமி, அர்ஜுன் மூர்த்தி, விஜயபிரபாகரன் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனுவை வழங்கினர். அந்த மனுவில் மொத்தம் பத்து விருப்பச் சின்னங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

லிஸ்டில் இருக்கும் 3 சின்னங்கள்:

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலின் போது, விஜய் ரசிகர் மன்றமாக இருந்தபோது ‘ஆட்டோ’ சின்னம் பெற்று சிலர் வெற்றி பெற்றனர். ஆனால் தற்போது ‘ஆட்டோ’ சின்னம் கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதால் அது கிடைப்பது கடினமாகியுள்ளது. எனவே அடுத்தபடியாக எளிதாக மக்கள் மனதில் பதியும் வகையில் பேட், விசில் மற்றும் பந்து ஆகிய சின்னங்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இதில் ஏதேனும் ஒரு சின்னம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சின்னங்கள் அனைத்தும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நடித்த படங்களில் பயன்படுத்தப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.

உதாரணமாக பிகில் படத்தில் கால்பந்து மற்றும் விசில் முக்கிய பங்கு வகித்துள்ளன. அதேபோல் பைரவா படத்திலும் விஜய் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே இத்தகைய சின்னங்களைப் பயன்படுத்தினால் மக்கள் மனதில் எளிதாக பதிய முடியும் என கட்சி தரப்பில் நம்பப்படுகிறது. இந்த சூழலில் இந்த மூன்று சின்னங்களுக்கு முன்னுரிமை வழங்கி மனுவில் கோரப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.