AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Thousand Lights Election 2026: 2026 தேர்தலை நோக்கி ஆயிரம் விளக்கு தொகுதி.. திமுகவின் கோட்டை தொடருமா?

Tamil Nadu Elections 2026: திமுகவைச் சேர்ந்த எழிலன் 71,867 வாக்குகள் (சுமார் 52.87%) பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் பாஜகவைச் சேர்ந்த குஷ்பு 39,945 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மைய வேட்பாளர் 11,791 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷெரின் 8,084 வாக்குகளும் பெற்றனர். அதே சமயம் 1,385 வாக்குகள் நோட்டாவிற்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.

Thousand Lights Election 2026: 2026 தேர்தலை நோக்கி ஆயிரம் விளக்கு தொகுதி.. திமுகவின் கோட்டை தொடருமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Mar 2026 15:14 PM IST

சென்னை, மாரச் 2, 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு வரவிருக்கும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுவது ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி தான். ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த எழிலன் உள்ளார்.

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி:

இவர் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குஷ்புவை எதிர்த்து போட்டியிட்டு, கிட்டத்தட்ட 3,200 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி ஒரு பொது பிரிவு தொகுதியாகவும், சென்னை மத்திய நாடாளுமன்றத் தொகுதியின் 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது. சென்னை மாநகராட்சி வார்டுகளில் எண் 109 முதல் 113 வரை மற்றும் 118, 119 ஆகிய வார்டுகள் இதில் அடங்கும்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக தரப்பில் எழிலன், பாஜக தரப்பில் குஷ்பு, மக்கள் நீதி மையம் தரப்பில் கே.எம். ஷெரீப், நாம் தமிழர் கட்சி தரப்பில் ஷெரின் ஆகியோர் போட்டியிட்டனர்.

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ:

இதில் திமுகவைச் சேர்ந்த எழிலன் 71,867 வாக்குகள் (சுமார் 52.87%) பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் பாஜகவைச் சேர்ந்த குஷ்பு 39,945 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மைய வேட்பாளர் 11,791 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷெரின் 8,084 வாக்குகளும் பெற்றனர். அதே சமயம் 1,385 வாக்குகள் நோட்டாவிற்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கு. கா. செல்வம் வெற்றி பெற்றார். அதற்கு முன் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த வளர்மதி எம்எல்ஏவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கொளத்தூர் தொகுதியில் 3 முறை வெற்றி வாகை சூடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

களம் யாருக்கு சாதகமாக உள்ளது:

ஆயிரம் விளக்கு தொகுதியை எடுத்துக்கொண்டால், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. தொடர்ந்து திமுக வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்று வருகின்றனர்.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதே வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்களா அல்லது வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும், ஆயிரம் விளக்கு தொகுதியைப் பொருத்தவரையில் ஆளும் கட்சியான திமுகவிற்கு சாதகமான நிலை காணப்படுகிறது.

Follow Us