இருமல் மருந்து உயிரிழப்பு விவகாரம்…சென்னையில் கோல்ட்ரிஃப் விளம்பரதாரரின் சொத்துக்கள் பறிமுதல்!
ED Seizes Coldrif Cough Advertisers Assets: கோல்ட்ரிஃப் இருமல் சிரப் மருந்தை குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் சென்னையில் உள்ள இந்த மருந்து நிறுவனத்தில் விளம்பரதாரின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் .
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து (கோல்ட்ரிஃப் இருமல் சிரப்) சாப்பிட்ட 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த மருந்தில் நச்சுத்தன்மை வாய்ந்த கிளைகோல் சேர்மங்கள் இருந்ததால் அதனை குடித்த குழந்தைகளின் சிறுநீரகம் செயலிழக்கப்பட்டு உயிரிழந்தது ஆய்வு மற்றும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான காஞ்சீபுரம் மாவட்டம், பூந்தமல்லியைச் சேர்ந்த ரங்கநாதனை மத்தியப் பிரதேச போலீசார் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தனர்.
கோல்ட்ரிஃப் மருந்தின் விளம்பரதாரர் சொத்து பறிமுதல்
இந்தச் சம்பவத்தில் மத்திய பிரதேச காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல்துறை தாக்கல் செய்த 2 முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது அமலாக்கத் துறை பண மோசடி வழக்கை பதிவு செய்தது. இந்த நிலையில், இந்த இருமல் சிரப் தயாரிப்பாளரான ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் விளம்பரதாரருக்குச் சொந்தமான சென்னையில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: “சென்னையும் அடுத்த டெல்லியாக மாறிவிடக்கூடும்”.. உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!




ரூ.2.04 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகள்
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள உள்ள சொத்துக்கள் ஜி. ரங்கநாதன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமானதாகும். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு ரூ.2.04 கோடி ஆகும். இருமல் மருந்து உயிரிழப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கும், லாபத்தை அதிகரிப்பதற்கும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளதும், மருந்து உற்பத்தியில், மருந்து தர மூலப்பொருட்களுக்குப் பதிலாக உற்பத்தியாளர் தொழில் துறை தர மூலப் பொருட்களை, முறையான தர சோதனைகள் இல்லாமல் பயன்படுத்தியது தெரியவந்தது.
விசாரணை அதிர்ச்சிகரமான தகவல்கள்
இது தொடர்பான ஆதாரங்கள் உருவாக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவும், விலைப் பட்டியல்கள் இல்லாமல் இது போன்ற பொருட்கள் ரொக்கமாக வாங்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. ஸ்ரேசன் பார்மாவின் உரிமையாளருடன் தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தொடர்பில் இருந்த போதிலும், மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் விதிகளின்படி கட்டாயப்படுத்தப்பட்ட வருடாந்திர ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு – அமைச்சர் அறிவிப்பு
கோல்ட்ரிஃப் மருந்து நிறுவன் மூடல்
தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் இயக்குநர் பொறுப்பாளர் பி.யூ. கார்த்திகேயன் மீது லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் அமலாக்கத் துறையால் இரண்டாவது புகார் பதிவு செய்யப்பட்டது. கார்த்திகேயன் கடந்த ஜூலை மாதம் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இரு மாநிலங்களும் மத்தியப் பிரதேசத்தின் எப்டிஏ துணை இயக்குநரைத் தவிர தலா இரண்டு மருந்து ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனமும் மூடப்பட்டது.