Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம்.. பின்னணியில் மந்திரவாதிகள்?.. ஷாக் சம்பவம்!

தஞ்சாவூர் அருகே சுடுகாட்டில் புதைக்கப்பட்ட 12 வயது சிறுமியின் சடலம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, நரபலி கொடுப்பதற்காக சிறுமியின் சடலத்தை மந்திரவாதிகள் எடுத்துச்சென்றதாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, வருவாய்துறையினர், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம்.. பின்னணியில் மந்திரவாதிகள்?.. ஷாக் சம்பவம்!
சிறுமியின் உடல் மாயம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 04 Dec 2025 12:59 PM IST

தஞ்சாவூர், டிசம்பர் 04: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து 12 வயது சிறுமியின் உடல் காணாமல் போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி தர்ஷிகா (12). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து இறுதி மரியாதை செலுத்தி, அரசடி மண்ணியாற்றங்கரை பகுதியில் உள்ள மயானத்தில் நேற்றிரவு அடக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து, தங்களது மகள் மறைந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்.. கோவையில் பயங்கரம்!!

மாயமான சிறுமியின் சடலம்:

இந்நிலையில், இன்று காலை சிறுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று சடங்குகள் செய்ய சென்றவர்கள் அந்த இடத்தில், பெரும் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அந்த பள்ளத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சிறுமியின் உடல் மாயமாகியிருந்தது. இதனால், சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். நேற்றிரவு தான் தங்களது மகளின் சடலத்தை 6 அடிக்கு பள்ளம் தோண்டி அடக்கம் செய்ததாகவும் கூறியுள்ளனார். ஆனால், இன்று சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் 5 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால், அதற்குள் சிறுமியின் சடலம் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவில்லை. அதோடு, சிறுமியின் உடல் மர்மநபர்களால் எடுத்துச்செல்லப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விசாரணையை தொடங்கிய போலீசார்:

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அதோடு, வருவாய் துறையினரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் அந்த பள்ளத்தை மேலும் தோண்டி, உள்ளே உடல் இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய ஆய்வு செய்ய உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரப்பான சூழல் நிலவுகிறது.

இதையும் படிக்க: வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன்.. உணவு குழாயில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சோகம்!!

பின்னணியில் மந்திரவாதிகள்?

குறிப்பாக, உயிரிழந்தது 12 வயது சிறுமி என்பதால் மாந்திரீகம் செய்ய உடலை மந்திரவாதிகள் உடலை திருடிச்சென்றார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே சிறுமியின் ஆடைகள், எலுமிச்சம்பழம், குங்குமம் உள்ளிட்டவை இருந்துள்ளது. அதனால், நரபலி கொடுப்பதற்காக சிறுமியின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம் மாயமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.