தஞ்சாவூரில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியர் படுகொலை – காதலன் வெறிச்செயல் – என்ன நடந்தது?
Teacher Murder Case : பள்ளி ஆசிரியை காவியாவும், அஜித் குமாரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும், காவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர், நவம்பர் 27 : தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாகப் (Teacher) பணியாற்றி வந்த காவியா நவம்பர் 27, 2025 அன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து வழக்கம்போல் புறப்பட்டார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த அஜித்குமார் என்பவர், கள்ளிக்குப்பம் பகுதியில் காவியாவை வழிமறித்து அவருடன் தகராறு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரைக் கத்தியால் குத்தி கொலை (Murder) செய்துள்ளார். பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தஞ்சாவூர் அருகே ஆசிரியர் படுகொலை
தஞ்சாவூர் அருகே காவியா என்ற ஆசிரியர் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரும் அஜித் குமார் என்பவரும் கடந்த நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவ்யாவிற்கு அவரது வீட்டில் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து காவ்யா, அஜித் குமாருடன் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார்.
இதையும் படிக்க : முதலிரவுக்கு மறுத்த மனைவி.. புதுமாப்பிள்ளை வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!




இதனால் ஆத்திரமடைந்த அஜித் குமார் பள்ளி செல்லும் வழியில் காவ்யாவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில் காவ்யா அவருடன் பேச மறுக்கவே மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் காவ்யாவை வெட்டி விட்டு தப்பி சென்றிருக்கிறார். இதனால் அந்த இடத்திலேயே காவ்யா இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தஞ்சாவூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காவியாவின் உடலை மீட்டு, அதனை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக அப்பகுதியினரிடையே தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆரம்ப கட்ட விசாரணையில் காவியாவும், நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும், காவியாவிற்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்த நடைபெற்றதால் ஆத்திரத்தில் இவ்வாறு நடந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க : 1.5 மாத குழந்தையின் மீது விழுந்த 2.5 வயது சிறுவன்.. பச்சிளம் குழந்தை பரிதாப பலி!
சரணடைந்த குற்றவாளி
கொலை செய்தபின் தப்பி ஓடிய அஜித்குமாரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து, அவர் தஞ்சாவூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகல் நேரத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியையையே வெட்டிக் கொலை செய்த சம்பவம் தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.