Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கர்ப்பிணி தற்கொலை.. அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை!

Pregnant Woman Consumed Poison in Trichy | திருச்சியில் 8 மாத கர்ப்பிணி ஒருவர் குடும்ப தகராறு காரணமாக எலி மருத்து சாப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அவர் உயிருக்கு போராடிய நிலையில், அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் மீட்டுள்ளனர்.

கர்ப்பிணி தற்கொலை.. அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Nov 2025 08:58 AM IST

திருச்சி, நவம்பர் 25 : திருச்சி (Trichy) திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் சேவியர். இவருக்கு திருமணமாகி 25 வயதில் ரோஸி என்ற மனைவி இருந்துள்ளார். அந்த பெண் 8 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரோஸி எலி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வயிற்றில் குழந்தை உள்ள நிலையில், கர்ப்பிணி எலி மருந்து குடித்தது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற 8 மாத கர்ப்பிணி

எலி மருந்து குடித்து மூச்சு, பேச்சு இல்லாமல் கிடந்த 8 மாத கர்ப்பிணையை மீட்ட அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், கர்ப்பிணியின் உடல் நலத்தில் நன்ன முன்னேற்றம் எதுவும் ஏற்படாமல் இருந்துள்ளது. கர்ப்பிணியின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், அவரது வயிற்றில் இருந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்துள்ளது.

இதையும் படிங்க : 6.16 கோடி பேருக்கு SIR படிவங்கள் விநியோகம்.. கால நீடிப்பு கிடையாது – தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டவட்டம்

அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட குழந்தை

பெண்ணின் உடல்நிலையை கண்ட மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். இதில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாகவும் இருந்துள்ளது. ஆனால், அந்த கர்ப்பிணி பெண்ணோ சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க : நவ.26 அன்று வங்கக்கடலில் உருவாகும் புயல்.. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கர்ப்பிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கர்ப்பிணியின் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.