Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மழையின் காரணமாக மின்சார கம்பி மீது விழுந்த மரம்… 3 பேர் பரிதாப பலி… கடலூர் அருகே சோகம்

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் மின்கம்பி அறுந்து விழுந்ததில், மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த மூன்று பேர் உயிரிழந்த துயர சம்பவம் நவம்பர் 23, 2025 அன்று பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் தங்கள் இரங்கல்ளை பதிவு செய்து வருகின்றனர்

மழையின் காரணமாக மின்சார கம்பி மீது விழுந்த மரம்… 3 பேர் பரிதாப பலி… கடலூர் அருகே சோகம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Nov 2025 20:14 PM IST

கடலூர், நவம்பர் 23 : கடலூர் (Cuddalore) மாவட்டத்தில் கனமழையால் (Heavy Rain) மின்கம்பி அறுந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்த துயர சம்பவம் நவம்பர் 23, 2025 அன்று பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஒரத்தூர் அருகே உள்ள சாத்தமங்கலம் பகுதியில் நவம்பர் 23, 2025 காலை முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் தாக்கத்தால் சாலையோரத்தில் இருந்த ஒரு பெரிய புளியமரம் திடீரென சாய்ந்து கீழே விழுந்தது. அந்த மரம் அங்கேயே சென்ற மின்கம்பி மீது நேரடியாக விழுந்தது. இதில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேர், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மின்சாரம் தாக்கி 3 பேர் மரணம்

கடலூர் மாவட்டம் சாந்தமங்கலம் என்ற ஊரில் காலை முதலே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த புளியமரம் திடீரென கீழே சாய்ந்தது. அப்போது அந்த மரத்தின் கிளைகள் மின் கம்பி மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் அந்த மரத்தின் அடியில் நின்றிருந்த மரிய சூசை, அவரது மனைவி பிலோல் மேரி மற்றும் வனதாஸ் மேரி என்ற பெண் என 3 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

இதையும் படிக்க : ‘ஓயாத ரீல்ஸ் மோகம்’.. எச்சரிக்கையை மீறி திருச்செந்தூர் கோவிலில் நடனமாடிய இளைஞர்கள்!!

இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்படது. அவர்களுடன் கிராமத்தினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் கிடைத்ததும் மீட்புப்படை, காவல்துறை, மின்சார வாரியத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இந்த விபத்தில் அறுந்து விழுந்த மின்கம்பிகள் முழுமையாக அகற்றப்பட்டு, அந்த பகுதியில் பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மழையால் தொடரும் உயிரிழப்புகள்

இந்த துயரச்சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊர்மக்களும், அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் தான் கடலூர் மாவட்டத்தில் வயலில் வேலை செய்து வந்த 4 பெண்கள் மின்னல் தாக்கி பரிதபாமாக உயிரிழந்தனர்.

இதையும் படிக்க : “முழு பணத்தை கொடுத்தும் கிடைக்காத பைக்!” – நுகர்வோர் புகாருக்கு ரூ.1.64 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பு!!

இந்த நிலையில் அந்த சம்பவத்தை மறப்பதற்குள் மேலும் ஒரு துயர சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  தென் கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை பரவி வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என கூறப்படுகிறது. மழை பெய்யும் மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்தனர்.