சேலம் – ஈரோடு புதிய பயணிகள் ரயில் சேவை – தெற்கு ரயில்வே அறிவிப்பு – எப்போது தெரியுமா?
New Train Service : மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் மற்றும் ஈரோடு இடையே புதிய மெமு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் வியாழக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், நவம்பர் 22: மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த சேலம் (Salem) – ஈரோடு மெமு பயணிகள் ரயில் சேவை இந்த மாதம் நவம்பர் 24, 2025 முதல் தொடங்குவுள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் மண்டலம் அறிவித்துள்ளது. சேலம் – ஈரோடு இடையே பயணிகள் ரயில்களின் (Train) எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள், வணிக சங்கங்கள், அரசியல் கட்சிகளிடமிருந்து தொடர்ந்து எழுந்து வந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று, சேலம் ரயில்வே மண்டல நிர்வாகம் கோரிக்கைகளை ஏற்று, சேலம் ரயில்வே மண்டல நிர்வாகம் தேவையான திட்ட அறிக்கையை தயாரித்து ரயில்வே வாரியத்திடம் அனுப்பியது. அதனை தெற்கு ரயில்வே வாரியம் அங்கீகரித்து, ரயில் சேவை தொடங்கவும் உத்தரவு வழங்கியுள்ளது.
வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை
சேலம் ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாட்களிலும் இந்த மெமு ரயில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் சேலத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு கிளம்பி, மகுடஞ்சாவடியை 6.29க்கு வந்தடையும். அங்கு சில நிமிடங்கள் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சங்ககிரி ரயில் நிலையத்தை காலை சரியாக 6.49 மணிக்கு வந்தடையும். பின்னர் காவிரி நிலையத்துக்கு 7.04 மணிக்கும் ஈரோடு ரயில்வே சந்திப்புக்கு 7.25க்கு சென்றடையும்.
இதையும் படிக்க : டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னையில் குடிநீர் மீட்டர் பொருத்தம்.. இதன் பயன்பாடும் முக்கிய அம்சங்களும் என்ன?




அதே போல ஈரோடு ரயில் நிலைத்தில் இருந்து மாலை 7.30 மணிக்கு கிளம்பும் இந்த மெமு ரயில் காவிரி ஸ்டேஷனுக்கு மாலை 7.38 மணிக்கும், சங்ககிரிக்கு மாலை 7.54 மணிக்கும் மகுடஞ்சாவடிக்கு சரியாக 8..09 மணிக்கும் சேலம் சந்திப்புக்கு சரியாக இரவு 8.45 மணிக்கு வந்தடையும். தினசரி வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். வாரத்தில் வியாழக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இந்த ரயில் சேவை இயங்கும்.
இதையும் படிக்க : எய்ம்ஸ் வராது… மெட்ரோவையும் வரவிட மாட்டோம்…. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
8 பெட்டிகள் இணைக்கப்பட்ட மெமு ரயில்
இந்த மெமு பயணிகள் ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய சேவை மூலம் சேலம் மற்றும் ஈரோடு பயணிகளுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் என ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது. பொது மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியுள்ளதால், இந்த புதிய சேவைக்காக சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ரயில் சேவையின் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் மிகவும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக இந்த ரயில் சேவை இயங்காமல் இருந்தால் வார நாட்கள் முழுவதும் மக்கள் பயணிக்க ஏதுவாக இருக்கும் என மக்களின் எண்ணமாக இருக்கிறது.