Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவை, மதுரைக்கு ஏன் மெட்ரோ இல்லை.. இது தான் காரணம்.. விளக்கம் கொடுத்த மத்திய அரசு..

Metro For Madurai And Coimbatore: ஒரு நகரத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமானால் அந்த நகரத்தின் மக்கள் தொகை குறைந்தபட்சம் 20 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால் மதுரையில் 15 லட்சம் மக்கள் தொகை மட்டுமே உள்ளது எனவே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, மதுரைக்கு ஏன் மெட்ரோ இல்லை.. இது தான் காரணம்.. விளக்கம் கொடுத்த மத்திய அரசு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Nov 2025 12:30 PM IST

நவம்பர் 20, 2025: தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாக கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது. ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இது பெரும் சர்ச்சையான விஷயமாக மாறியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பதிவில்,

“கோயில் நகர் மதுரைக்கும், தென்னிந்திய மேன்செஸ்டர் கோவைக்கும் ‘நோ மெட்ரோ’ என நிராகரித்துள்ளது பாஜக அரசு. அனைவருக்கும் பொதுவானதாக செயல்படுவதே அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பாஜகவை தமிழக மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு,” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: பேட், விசில், பந்து.. பொது சின்னம் கோரும் த.வெ.க.. இந்த சின்னங்கள் கோர என்ன காரணம்?

திட்டங்கள் நிராகரிப்பட்டதற்கான காரணம் – தமிழக அரசுக்கு கடிதம்:

இந்த விஷயம் பெரும் விவாதமாக மாறியுள்ள சூழலில், இந்த திட்டங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பது தொடர்பாக காரணங்களை விளக்கி மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், கோவையில் 34 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது உள்ள சாலைப் போக்குவரத்து பயண நேரமே உத்தேசிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பயண நேரத்தை விட குறைவாக உள்ளது. இதனால் மக்கள் மெட்ரோ ரயிலுக்கு மாற வாய்ப்புகள் குறைவு என கருதப்படுகிறது. கோவையில் மக்கள் தொகை 15.84 லட்சம் உள்ளது. சென்னை மெட்ரோவின் முதற்கட்டத்துடன் ஒப்பிடுகையில், இங்கே பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 4 லட்சம் மட்டுமே அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: பராமரிப்பு பணிகள் காரணமாக 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து.. இயக்கப்படும் 17 சிறப்பு ரயில்கள்.. முழு விவரம்..

மக்கள் தொகை குறைவாக இருப்பது தான் காரணம்:

அதேபோல், ஒரு நகரத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமானால் அந்த நகரத்தின் மக்கள் தொகை குறைந்தபட்சம் 20 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால் மதுரையில் 15 லட்சம் மக்கள் தொகை மட்டுமே உள்ளது. இது மெட்ரோ அமைப்பதற்கான தகுதி வரம்பை எட்டவில்லை. மேலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் போது பல கட்டிடங்களை இடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அவ்வாறு இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் மிக அதிக மதிப்புடையதாக இருக்கலாம். 20 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவது நடைமுறைக்கு உகந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர், ஆக்ரா, மகாராஷ்டிராவின் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருந்தபோதிலும் அங்கும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில், இதே காரணத்தைக் கொண்டு தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையான விஷயமாக மாறியுள்ளது.