Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“எங்க வீட்டு பையன்”.. விஜய் மீது திடீர் பாசம் காட்டும் பிரேமலதா விஜயகாந்த்!!

எடப்பாடி பழனிசாமி 2026ல் கட்டாயம் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தரப்படும் என்று உறுதியளித்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். ஆனால், தாங்கள் 2025ல் சீட் தருவார்கள் என்று நினைத்தோம் என்றும், அதனால்தான் குழப்பம் ஏற்பட்டது. அதற்காக அவர்களுடன் கூட்டணி என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் கூறினார்.

“எங்க வீட்டு பையன்”.. விஜய் மீது திடீர் பாசம் காட்டும் பிரேமலதா விஜயகாந்த்!!
பிரேமலதா விஜயகாந்த், விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Nov 2025 12:00 PM IST

சிவகங்கை, நவம்பர் 22:விஜய்யை நாங்கள் எப்போதும் எதிர்க்கவில்லை; எங்கள் வீட்டு பையன் என்று தானே சொல்லி வருகிறேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த தேர்தலில் விஜய்யின் அரசியல் வருகை முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதனால், கூட்டணி கணக்கே முற்றிலும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடைசி நேரம் வரை அரசியல் பரபரப்பு நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்தவகையில், வரும் தேர்தலில் தேமுதிக தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

மேலும் படிக்க: “SIR பணிகளில் ஆளும் கட்சியின் தலையீடு”.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!

ஜன.9ல் கூட்டணி அறிவிப்பு:

இதனிடையே, உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், 2026 தேர்தல் தேமுதிகவிற்கு முக்கியமான தேர்தல். அனைவரும் எதிர்பார்க்கும் மகத்தான கூட்டணி அமைப்போம். ஜன.9-ம் தேதி கடலூர் மாநாட்டில் கூட்டணியை அறிவிப்போம் என்றார்.

எங்க வீட்டு பையன் விஜய்:

அதோடு, நேற்று முளைத்த காளான் ஒரு நாள் மழைக்கே தாங்காது என்று நான் விஜய்யை குறிப்பிடவில்லை. புதிதாக 5 கட்சிகள் உருவாகியிருக்கிறது; அவர்களை சொன்னதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றார். மேலும், விஜய்யை நாங்கள் எப்போதும் எதிர்க்கவில்லை; எங்கள் வீட்டு பையன் என்று தானே சொல்லி வருகிறேன். அவர் விஜயகாந்த் மாதிரி சினிமாவிலும், அரசியலிலும் சாதிக்க வேண்டும். விஜய்யை கூத்தாடி என்று நான் சொன்னதே இல்லை. நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் அப்படித்தான் மற்றவர்கள் சொல்கிறார்கள் என்றும் விளக்கமளித்தார்.

ஒரு நாள் மழைக்கே தாங்காத கட்சி:

முன்னதாக காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பல கட்சிகள் உள்ளன. நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் ஒன்றும் எடுபடாது. ஒரு நாள் மழைக்கே அது தாங்காது. தேமுதிக துவங்கி 20 ஆண்டுகள் கடந்து 21வது ஆண்டில் காலடி வைத்துள்ளது. இங்கு வந்த கூட்டம் தானாக வந்தது. ஆனால் சிலர் மக்கள் வெள்ளம் அதிகமாக உள்ளது போல் ஏமாற்றுகின்றனர். போலித்தனம், தங்களை தாங்களே ஏமாற்றுகின்றனர்.

மேலும் படிக்க: இது தமிழ்நாடா, வடநாடா? 52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு!!

நேற்று முளைத்த காளான்கள்:

இங்கு கூட்டம் கூட்ட பக்கத்து தொகுதியில் உள்ளவர்களையும் அழைத்து வருகின்றனர். நேற்று முளைத்த காளான்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் என அனைத்தையும் கடந்த தெளிந்த ஓடையாக நிறை குடமாக எதற்கும் அஞ்சாமல் உள்ளோம்’’ என்று கூறியிருந்தார்.