Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு… 3 மூவரும் குற்றவாளிகள் – 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தீர்ப்பு

Key Verdict Delivered: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. வட மாநிலங்களை சேர்ந்த பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு… 3 மூவரும் குற்றவாளிகள் – 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தீர்ப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Nov 2025 19:32 PM IST

சென்னை, நவம்பர் 21 : கும்மிடிப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் 20 ஆண்டுகள் கழித்து மூவரும் குற்றவாளிகள் என கூடுதல் அமர்வு நீதிமன்றம் (Court) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பவாரியா கொள்ளையர் கும்பல் தனியாக இருக்கும் வீடுகளை குறிவைத்து வீட்டில் உள்ளவர்களை கொடூரமாக கொலை செய்து அவர்களின் வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணங்களை கொள்ளையடித்து சென்றனர். இதில் திருவள்ளூர்  (Tiruvallur) மாவட்டம் கும்மிடிப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனமும் அடங்குவார். இந்த வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.

20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தீர்ப்பு

கடந்த 1995 முதல் 2005 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வட மாநிலங்களை சேர்ந்த பவாரியா கொள்ளை கும்பல் 13 பேரை கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதில் திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனமும் கொலை செய்யப்பட்டார். இந்த கும்பல் பல வீடுகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அட்டூழியங்களில் ஈடுபட்டனர். இதனால் மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினரால் அவர்களை பிடிக்க முடியாமல் திணறினர்.

இதையும் படிக்க : தாய்ப்பால் குடிக்கும்போது நடந்த விபரீதம்.. பரிதாபமாக பலியான 2 நாட்களே ஆன பெண் குழந்தை!

இந்த நிலையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த கொள்ளை கும்பலை பிடிக்க அப்போது ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டார். அவர்களை பிடிக்க 5 சிறப்பு அணிகள் உருவாக்கப்பட்டன. இந்த அணிகள் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட வட இந்தியா முழுவதும் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த சிறப்புப்படை இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 13 பவாரியா கொள்ளையர்களை கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் 2 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர்.

மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

பிடிபட்ட 13 பேரில், நீதிமன்றம் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கியது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. இந்த நான்கு பேரில் கொள்ளையர் குழுவின் தலைவரான ஓமா வேலூர் சிறையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மேலும் ஒருவர் சிறையில் இறந்தார். மூவர் மட்டும் சிறையில் உள்ள நிலையில் மேலும் 9 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில், 20 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் நவம்பர் 21, 2025 அன்று முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதன் படி, முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயில்தார் சிங் என்பவர் குறித்து வருகிற நவம்பர் 24, 2025 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் முடிவு எட்டியுள்ளது.