Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tiruvallur Minor Girl Case: திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வெளியான குற்றவாளியின் பெயர்..!

Assam Man Arrested: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், 13 நாட்களுக்குப் பிறகு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான ராஜூ பிஸ்வகர்மா தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tiruvallur Minor Girl Case:  திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வெளியான குற்றவாளியின் பெயர்..!
கைது செய்யப்பட்ட நபர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Jul 2025 17:23 PM IST

திருவள்ளூர், ஜூலை 26: திருவள்ளூர் (Thiruvallur) மாவட்டத்தில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது 10 வயது சிறுமி கடத்தப்பட்டு (Minor girl assault case) பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 நாட்களுக்கு பிறகு, நேற்று அதாவது 2025 ஜூலை 25ம் தேதி அசாமை சேர்ந்த ஒரு இளைஞரை தமிழ்நாடு காவல்துறை (Tamil Nadu Police) கைது செய்தது. தமிழ்நாடு – ஆந்திரா எல்லை பகுதிகளில் உள்ள சூலூர்ப் பேட்டையில் குற்றம் நடந்த நாளிலிருந்து சிசிடிவி காட்சிகளில் பதிவான அதே உடையில், கைது செய்யப்பட்ட நபர் காணப்பட்டார். இந்தநிலையில், திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியின் பெயர் 35 வயதான ராஜூ பிஸ்வகர்மா எனவும், இவர் அசாம் மாநிலத்தின் தின்சுகியாவை சேர்ந்தவர் என்பதும் காவல்துறை தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது..?

கடந்த 2025 ஜூலை 12ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பள்ளியிலிருந்து தனியாக வீடு திரும்பி கொண்டிருந்தபோது, யாரும் இல்லாத தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட அசாமை சேர்ந்த நபர், அந்த சிறுமியை கடத்தியதாக கூறப்படுகிறது. வைரலான வீடியோவில் சிசிடிவி காட்சிகளில், அந்த நபர் சிறுமியை கடத்துவதற்கு சுற்றி யாராவது வருகிறீர்களா என்று பார்த்து, சிறுமியை பின் தொடர்கிறார்.

ALSO READ: திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை: முக்கிய குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்..!

இந்த வன்கொடுமைக்கு பிறகு, பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு ஓடிப்போய் தனது பாட்டியிடம் தெரிவித்ததாகவும், அதன்பிறகு, அந்த சிறுமியை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதன்பின்னர், அந்த சிறுமி மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்த உடனேயே, ஆரம்பாக்கம் காவல்துறை பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க திருவள்ளூர் காவல்துறை எட்டு சிறப்புக் குழுக்களை அமைத்தது. கடைகள், சாலைகள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சந்தேக நபர் வெளிர் நீல நிற டி-சர்ட் அணிந்திருக்கும் ஸ்டில் படங்கள் மற்றும் கிளிப்புகள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பரவலாகப் பரப்பப்பட்டன.

அதிரடி கைது:


10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பல நாட்களுக்கு பின்பும் குற்றவாளி கைது செய்யப்படாதது பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. சந்தேக நபரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் எந்தவொரு தகவலுக்கும் ரூ.5 லட்சம் வெகுமதி அளிப்பதாக காவல்துறை அறிவித்தது. விசாரணையைத் தொடர்ந்து, 2025 ஜூலை 25 ஆம் தேதி தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லையில் சூலூர்பேட்டையில் கைது செய்யப்பட்டார்.

ALSO READ: திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேற்குவங்க இளைஞர் கைது!

முதற்கட்ட விசாரணையின் போது அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, தனது பெயர் ராஜூ பிஸ்வகர்மா என்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். இவர், சூலூர்பேட்டையில் உள்ள ஒரு சாலையோர தாபாவில் பணிபுரிந்து வந்துள்ளார்.