தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!
தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்தவர்களில் 5க்கும் மேற்பட்டோர் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தென்காசி, நவம்பர் 24: தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி – மதுரை சாலையில் அச்சம்பட்டி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து, படுகாயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுகொண்டிருந்த பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த பேருந்தும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களை மீட்ட கிராமத்தினர்:
bro
தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
தென்காசி மாவட்டம் இடைகால் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. #Tenkasi #Accident #Bus pic.twitter.com/3zXZV0sEFJ
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) November 24, 2025
தொடர்ந்து, காயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறன்றனர். இடைக்கால் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் இந்த விபத்து நடக்கவே, அருகில் இருந்த கிராமத்தை சேர்ந்த பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு உதவியுள்ளனர். மேலும், உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸூக்கும் விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
பலி எண்ணிக்கை உயரும் அபாயம்:
உடனடியாக சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ், தனியார் தொண்ட நிறுவன ஊழியர்களும் விரைந்தனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து காயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று வருகின்றனர். அதோடு, காயடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
கனமழையால் சாலைகள் துண்டிப்பு:
ஏற்கெனவே, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகள் கூட துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்வது என்பதே சற்று கடினமான காரியமாகியுள்ளது.