Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘யாரை தற்குறி என்கிறீர்கள்?’ தவெகவினர் தற்குறிகளா?.. ஃபீல் பண்ணப்போறீங்க.. கொந்தளித்த விஜய்!!

Vijay speech in kanchipuram: திமுகவினர் தற்குறிகள் எனப் பேசிய பேச்சுக்கு எல்லா இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பும் பாருங்கள் என்று விஜய் எச்சரித்துள்ளார். நீங்கள் யாரை யாரை தற்குறி, தற்குறி என்று சொல்கிறீர்களோ, அவர்களால் உங்கள் அரசியல் வாழ்க்கை காணாமல் போகும் என்றும் கூறியுள்ளார்.

‘யாரை தற்குறி என்கிறீர்கள்?’ தவெகவினர் தற்குறிகளா?.. ஃபீல் பண்ணப்போறீங்க.. கொந்தளித்த விஜய்!!
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Nov 2025 15:34 PM IST

காஞ்சிபுரம், நவம்பர் 23: தவெக தொண்டர்களை தற்குறி என்கிறார்கள், அவர்கள் தற்குறிகள் கிடையாது. தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள்!.. அரசியல் மாற்றத்திற்கன அறிகுறிகள் என்று விஜய் கொந்தளிப்புடன் பேசியுள்ளார். தவெகவிற்கு அதிகளவில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படும் நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வாறு தவெகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களை தற்குறிகள் என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், காஞ்சிபுரத்தில் இன்று மக்களை சந்தித்த விஜய் பேசியுள்ளார். கரூர் துயரச் சம்பவத்திற்கு பின் முதன் முறையாக இன்று விஜய் மக்களை சந்திப்பதால், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு, தவெக தன்னார்வலர்கள், பவுன்சர்கள், போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிக்க: ‘அனைவருக்கும் வீடு, வீட்டுக்கு ஒரு பைக்’.. தவெக ஆட்சிக்கு வந்தால்… விஜய் கொடுத்த வாக்குறுதி!!

யாரை தற்குறி என்கிறீர்கள்?

அந்தவகையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் பல்வேறு விவகாரம் குறித்து பேசினார். குறிப்பாக தவெகவினரை கடுமையாக விமர்சிப்பது குறித்து அவர் பேசியதாவது, அதென்னப்பா அது.. தற்குறியா.!, நமது தவெக கட்சிக்கு ஆதரவு தரும் பல லட்சம் தொண்டர்கள், மக்கள், நண்பா- நண்பி, Gen Z தலைமுறையினரைத் தற்குறிகள் எனச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். இப்போது அவர்களே மாற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் தற்குறி எல்லாம் இல்லை. அப்படி எல்லாம் கூப்பிடாதீர்கள். அவர்கள் சங்கிகள் எல்லாம் இல்லை. எனவே அப்படி எல்லாம் கூறாதீர்கள் என்று ஒரு குரல் வந்துள்ளது.

தவெகவுக்கு ஆதரவு குரல்:

யார் அந்த குரல் எனப் பார்த்தால் ஒரு ஆச்சரியம். சமீபத்தில் அறிவு திருவிழா. இல்லை சாரி, அவதூறு திருவிழா என ஒன்று நடத்தினார்களே. அதில் அவர்கள் தலைமையின் அறிவு கண்ணைத் திறந்து வைக்கும்படி ஒருவர் பேசியுள்ளார். அவர்கள் எம்எல்ஏ ஒருவரே அப்படிப் பேசியுள்ளார். அவர் யார் எனப் பார்த்தால் நமது கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாளின் உறவினர்.

என்னடா இது தவெகவுக்கு ஆதரவாக நமது கட்சியில் இருந்தே ஒரு குரல் வருகிறதே என ஒரு குழப்பம். அந்தக் குழப்பம் இதோடு நிற்காது. அந்த ஆதரவு குரல் எல்லா இடங்களிலும், எல்லா வீடுகளிலும் இனி எதிரொலிக்கும். சும்மா பிளாஸ்ட் பிளாஸ்ட் தான். தற்குறிகள் எனப் பேசிய பேச்சுக்கு எல்லா இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பும் பாருங்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க : டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னையில் குடிநீர் மீட்டர் பொருத்தம்.. இதன் பயன்பாடும் முக்கிய அம்சங்களும் என்ன?

உங்கள் அரசியலே கேள்விக்குறியாகும்:

அதோடு, நீங்கள் யாரை யாரை தற்குறி, தற்குறி என்று சொல்கிறீர்களோ,  அந்த தற்குறிகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்துதான் வாழ்நாள் முழுக்க, விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்க அரசியலையே கேள்விக்குறியாக்கப் போறாங்க. விஜய் எதையும் சொல்ல மாட்டான். ஒன்னு சொன்னா அதை செய்யாம விட மாட்டான். ஏன்டா இந்த விஜயை தொட்டோம். ஏன்டா விஜய்கூட இருக்குற இந்த மக்களை தொட்டோம் என நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ணப் போறீங்க என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.