Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘அனைவருக்கும் வீடு, வீட்டுக்கு ஒரு பைக்’.. தவெக ஆட்சிக்கு வந்தால்… விஜய் கொடுத்த வாக்குறுதி!!

TVK Vijay speech: மக்களுக்கு நல்லது செய்வதறாகாகவே அரசியலுக்கு வந்துள்ளதாகவும், அதன் பின் வேறு எந்த அஜென்டாவும் இல்லை எனவும் விஜய் கூறியுள்ளார். அதோடு, தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம், செயல்படுத்துவோம் என்பது குறித்த வாக்குறுதிகளையும் மேலோட்டமாக கூறியுள்ளார்.

‘அனைவருக்கும் வீடு, வீட்டுக்கு ஒரு பைக்’.. தவெக ஆட்சிக்கு வந்தால்… விஜய் கொடுத்த வாக்குறுதி!!
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Nov 2025 13:06 PM IST

காஞ்சிபுரம், நவம்பர் 23: தவெக தலைவர் விஜய் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், மக்களை சந்தித்தார். கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் முதல் மக்கள் சந்திப்பு என்பதால், இன்றைய கூட்டம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி, கூட்டத்திற்கு சரியான நேரத்திற்கு (11 மணிக்கு) வருகை தந்த விஜய் பேசியதாவது, அண்ணா ஆரம்பித்த கட்சியை அதற்குப் பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் பண்றாங்க என்று நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா? தனிப்பட்ட முறையில் எனக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. அவர்களுக்கு என் மீது வன்மம் இருக்கலாம். நமக்கு எல்லாவற்றையும் கொடுத்த மக்களுக்காக நாம் எல்லா நல்லதையும் செய்ய வேண்டும், அதையும் சட்டப்பூர்வமாக, மனப்பூர்வமாக, அங்கீகாரத்துடன், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தில்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதனால் தான் மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை கையில் எடுத்தோம் என்று கூறினார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

தவெகவிற்கு கொள்கை இல்லையா?

நாங்கள் கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்று அறிவித்து விட்டு தான் வந்திருக்கிறோம். கரூர் விவகாரம் குறித்து பேசுவோம்னு நினைத்திருப்பார்கள். அதைப் பற்றி நான் பின்னர் பேசுகிறேன் என்றார். மேலும், நமக்கு கொள்கை இல்லை என்று தமிழக முதலமைச்சர் சொல்கிறார். ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற தத்துவத்தை நமது கட்சியின் அடிப்படை கோட்பாடாக அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்

திமுகவின் கொள்கையே கொள்ளைதான்:

 

சிஏஏ அறிவிப்பை எதிர்த்த நமக்கு, வக்பு சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா? நீட்டை ஒழித்துவிடுவோம் என்று கதை விடாமல், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொன்னதோடு, அதற்கு ஒரு இடைக்கால தீர்வையும் சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? இவர்கள் மட்டும்தான் எல்லா கொள்கையையும் குத்தகைக்கு எடுத்தது போல் பேசுகிறார்கள். திமுகவின் கொள்கையே கொள்ளைதான். இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வீடு:

தவெக ஆட்சிக்கு வந்தால், அதென்னா வந்தால்.. வருவோம்.. மக்கள் கண்டிப்பாக தவெகவை ஆட்சிக்கு வரவைப்பார்கள், அப்படி மக்களால் அமைக்கப்பட உள்ள ஆட்சியில் என்ன செய்யப்போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக கொடுப்போம். அதற்கு முன்பாக அதைப் பற்றி சிறு குறிப்பு தருவதாகவும் கூறினார்.

அதன்படி, 1.
அனைவருக்கும் நிரந்திர வீடு அவசியம் அது தவெகவின் கனவு 2. ஓவ்வொரு வீட்டிற்கும் ஒரு மோட்டார் சைக்கிள் உறுதியாக இருக்க வேண்டும் 3. காரும் லட்சியம், அதற்கான வசதி வாய்ப்பை உருவாக்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் 4. ஒவ்வொரு வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது டிகிரி படித்திருக்க வேண்டும்.

இதையும் படிக்க : எய்ம்ஸ் வராது… மெட்ரோவையும் வரவிட மாட்டோம்…. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

வீட்டில் ஒருவருக்கு நிரந்தர விருமானம்:

5. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு குறைந்தது நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும், அதற்கான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், அதற்கு ஏற்ற மாதிரி கல்வியில் பாடத்திருத்தம் செய்ய வேண்டும் 6. அரசு மருத்துவமனை குறித்து பயமின்றி மக்கள் அனைவரும் செல்லும் வகையில் மாற்ற வேண்டும் 7. பருவமழையால் ஏற்படும் வெள்ளத்தால் ஊரும், மக்களும், விவசாயமும் பாதிக்காத அளவு பாதுகாப்பான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.