Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

SIR படிவத்தால் 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொலையாளி – சென்னை கொலை வழக்கில் திடீர் திருப்பம் – பரபரப்பு தகவல்

Ennore Murder Case Breakthrough : சென்னை எண்ணூரில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில், நீண்டகாலம் தலைமறைவாக இருந்த குற்றவாளி ராஜேந்திரன், SIR படிவத்தின் மூலம் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

SIR படிவத்தால் 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொலையாளி – சென்னை கொலை வழக்கில் திடீர் திருப்பம் – பரபரப்பு தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Nov 2025 16:37 PM IST

சென்னை நவம்பர் 21: எண்ணூரில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில், நீண்டகாலம் தலைமறைவாக இருந்த குற்றவாளி ராஜேந்திரன், SIR படிவத்தின் (SIR) அடிப்படையில் அவரது இருப்பிடம் தெரிந்த நிலையில் தனிப்படை போலீசார் அவரை, நவம்பர் 21, 2025 அன்று கைது செய்தனர்.  சென்னை (Chennai) எண்ணூரில் நடைபெற்ற கொலை வழக்கில், முதன்மை குற்றவாளியாக இருந்த ராஜேந்திரன், சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக  சென்னையில் இருந்து தப்பி ஓடியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மதம் மாறிய அவர்,  கடந்த இருபது ஆண்டுகளாக பெயரை மாற்றிக்கொண்டு போலீசாரின் கண்காணிப்பில் இருந்து மறைந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

பெங்களூரில் புதிய வாழ்க்கை

சென்னை எண்ணூரில் கடந்த 21 ஆண்டுகளாக கொலை வழக்கு ஒன்றின் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ராஜேந்திரன் என்பவர் கேரளா மற்றும் கர்நாடகா பகுதியில் சுற்றித்திரிந்து வந்துள்ளார். பின்னர் இஸ்லாம் மதத்துக்கு மாறிய அவர், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் குடியேறிய புதிய அடையாளத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணிகள் மூலம் சிக்கியிருக்கிறார்.

இதையும் படிக்க : வீட்டுல ஒத்த ரூபாய் கூட இல்ல.. திருட வந்த வீட்டில் எதுவும் கிடைக்காததால் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதிய திருடன்!

சிக்கியது எப்படி?

ராஜேந்திரன்  என்பவர் எண்ணூரில் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளருடன் ஏற்பட்ட தகராறில் அவரை ராஜேந்திரன் கொலை செய்திருக்கிறார். இந்த நிலையில் தலைமறைவான அவரை காவல்துறையினர் எவ்வளவு முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

அவர் கர்நாடக மற்றும் கேரள எல்லா பகுதியில் சுற்றித் திரிந்திருக்கிறார். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் படிவம் நிரப்பும் பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வந்த நிலையில், ராஜேந்திரனின் மகன் தனது எஸ்ஐஆர் படிவத்தில் தனது அப்பாவின் விவரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அப்போது தான் ராஜேந்திரன் குறித்த விவரங்கள் காவல்துறையினருக்கு தெரிய வந்திருக்கிறது. 

இதனையடுத்து ராஜேந்திரனின் மகனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ராஜேந்திரன், இஸ்லாம் மதத்துக்கு மாறி, தனது பெயரை ரஃபீக் என மாற்றிக்கொண்டு பெங்களூருவில் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. தற்போது அவரை கைது செய்த காவல்துறையினர் எண்ணூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை: இடிந்து விழுந்த வீடுகள்.. வெள்ள அபாய எச்சரிக்கை!!

முன்னதாக மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில், 37 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1988 ஆம் ஆண்டு காணாமல் போன விவேக் சக்கரபோர்த்தி என்பவர், எஸ்ஐஆர் படிவத்தின் மூலம் தனது குடும்பத்தினரை சென்றடைந்திருக்கிறார். எஸ்ஐஆர் அதிகாரிகளிடம் தனது பிறப்பிடத்தை சொல்ல, அவர் உயிரோடிருப்பது அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது.