AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவையில் 3 மணி நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளை – என்ன நடந்தது?

Coimbatore Theft Case : கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹவுசிங் போர்டு அரசு குடியிருப்பு வளாகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 பவுன் தங்க நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் 3 மணி நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளை – என்ன நடந்தது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Nov 2025 22:42 PM IST

கோயம்புத்தூர், நவம்பர் 29 : கோயம்புத்தூர் (Coimbatore) மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹவுசிங் போர்டு அரசு குடியிருப்பு வளாகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 பவுன் தங்க நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியி நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் நவம்பர் 29, 2025 அதிகாலை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தற்போது அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கமளித்துள்ளார்.

கோவையில் 3 மணி நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளை

கோயம்புத்தூரில் உள்ள அரசு ஹவுசிங் போர்டு குடியிருப்பு வளாகத்தில் 1800 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலும் அரசு ஊழியர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் 28, 2025 அன்று இந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து ஏ பிளாக்கில் 3 வீடுகள், சி பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  முதலில் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் முதலில் ஒருவர் தனது வீட்டில்  நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக என புகார் அளித்தார்.

இதையும் படிக்க : முடிவுக்கு வந்தது ஸ்டிரைக்:18 நாட்களுக்குப் பிறகு வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து இயக்கம்!

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சோதனை செய்த போது, பல வீடுகளிலும் கொள்ளை நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடவியல் நிபுணர்கள் வந்து சம்பவ இடத்தில் கை ரேகைகளை சேகரித்தனர். இது தொடர்பாக3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 சிறப்பு குழு அமைக்கப்பட்டு அந்த பகுதியில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

குற்றவாளிகளை சுட்டுபிடித்த போலீசார்

சிறப்பு குழு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது குனியமுத்தூர் அருகே குளத்துபாளையம் பகுதியில் கொள்ளையர்கள் 3 பேர் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க முயன்ற போது, போலீஸ் அதிகாரி பார்த்தீபனை தாக்க முயன்றிருக்கின்றனர். இதனையடுத்து தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க : கள்ளக்காதலுக்கு தடையாக மாறிய கணவன்.. காதலனுடன் இணைந்து கொலை செய்த மனைவி!

கைது செய்யப்பட்டவர்கள் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆரிஃப் கஜுவாலா, ஆசிஃப், இர்ஃபான் என்பதும் அவர்கள் தீபாவளிக்கு முன் குனியமுத்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அலுமினியம் கண்டெய்னர் வியாபாரம் என்ற பெயரில் 3 நாட்களாக நகருக்குள் சுற்றி வந்தது தெரிய வந்தது.

Follow Us