AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முடிவுக்கு வந்தது ஸ்டிரைக்:18 நாட்களுக்குப் பிறகு வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து இயக்கம்!

‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’ விதிகளின்படி தற்போது தமிழகத்தில் அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலைவரி வசூலிக்கப்படுவதால், இதே முறையில், கேரளா மற்றும் கர்நாடகாவிலும் தமிழக பேருந்துகளிடம் வரி செலுத்துமாறு அபராதம் விதித்ததால் பிரச்சனை தொடங்கியது. தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

முடிவுக்கு வந்தது ஸ்டிரைக்:18 நாட்களுக்குப் பிறகு வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து இயக்கம்!
ஆம்னி பேருந்துகள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Nov 2025 08:22 AM IST

சென்னை, நவம்பர் 29: தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்து சேவை, 18 நாள் இடைவெளிக்குப் பிறகு நேற்று முதல் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. அந்தவகையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதியன்று, தமிழ்நாட்டிலிருந்து கேரளா நோக்கி சென்ற பல ஆம்னி பேருந்துகளுக்கு, அந்த மாநில போக்குவரத்து அதிகாரிகள் சாலைவரி மற்றும் பிற காரணங்களை சுட்டிக்காட்டி ரூ.70 லட்சம் வரை அபராதம் விதித்தனர். இதேபோல், தமிழகத்​தில் இருந்து கர்​நாடகா​வுக்கு இயக்​கப்​பட்ட தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்​துகள் உரிய அனு​ம​தி, பாது​காப்புச் சான்​றிதழ் இல்​லாதவை​யாக இருப்​ப​தாகக் ​கூறி, அம்​மாநில போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் 60 பேருந்​துகளுக்கு அபராதம் விதித்​தனர். மேலும் ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்​மிட்’ விதி​களின்படி சாலை வரி விதிக்​கப்​பட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​விக்கும் வகையில், தமிழக ஆம்னி பேருந்து உரிமை​யாளர்கள் கர்​நாட​கா, கேரளா உள்​ளிட்ட மாநிலங்​களுக்கு பேருந்​துகள் இயக்​கப்​ப​டாது என ஸ்டிரைக் அறி​வித்​தனர்.

இதையும் படிக்க : “பாஜகவின் ஸ்லீப்பர் செல் தான் செங்கோட்டையன்”.. அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!

‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’ படி வரி வசூலிப்போம்:

இதுகுறித்து விளக்கம் அளித்த கேரளா மற்றும் கர்நாடக போக்குவரத்துத் துறையினர், “2021 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’ விதிகளின்படி அண்டை மாநிலப் பேருந்துகளிடம் சாலை வரி வசூலிக்கப்படுகிறது. அதேபோல் நாங்களும் தமிழ்நாடு பேருந்துகளிடமிருந்து வரி வசூலிக்கிறோம்,” என தெரிவித்தனர்.

தொடர்ந்து, இவ்விவகாரத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்கள் அறிவித்தன. இதனைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்தது. எனினும், சுமூக தீர்வு எட்டப்படாமல் இருந்தது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு:

இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு இடையே நேற்றைய தினம் சிறப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து, 18 நாள் நிறுத்தத்திற்குப் பின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறும்போது,“மத்திய அரசின் ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’ விதிகளின்படி தற்போது தமிழகத்தில் அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலைவரி வசூலிக்கப்படுகிறது. இதே முறையில், கேரளா மற்றும் கர்நாடகா அதிகாரிகளும் எங்களிடம் வரி கோரியுள்ளனர். இதை எதிர்த்து நாங்கள் சேவையை நிறுத்தினோம்.

இதையும் படிக்க : இருட்டைக் கண்டு அஞ்ச வேண்டாம்; “சூரிய உதயம் வரும்; உதயநிதியும் வருவார்”.. கமல்ஹாசன் பேச்சு!!

ரூ.84 கோடிக்கு மேல் இழப்பு:

18 நாட்கள் சேவை நிறுத்தப்பட்டதால், தினமும் சுமார் ரூ.4 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டது. அதன்படி,18 நாட்களில் மொத்தமாக ரூ.84 கோடியைத் தாண்டி இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளை அமைச்சர் சிவசங்கரும், போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமியும் விரிவாக கேட்டறிந்து, முதல்வரிடம் விவாதித்து நல்ல தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

தொடர்ந்து, பயணிகள் நலனை மற்றும் சபரிமலை ஐய்யப்ப பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, வெளிமாநில சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.

Follow Us