Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இருட்டைக் கண்டு அஞ்ச வேண்டாம்; “சூரிய உதயம் வரும்; உதயநிதியும் வருவார்”.. கமல்ஹாசன் பேச்சு!!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மநீம தலைவர் கமல்ஹாசன், தான் ஏன் திமுகவுடன் கூட்டணி வைத்தேன் என்பது குறித்து மீண்டும் விளக்கமளித்துள்ளார். அதோடு, மக்கள் நீதி மய்யத்தின், மகளிர் உதவித்தொகை திட்டத்தை திமுக செயல்படுத்தியதாகவும் பேசியுள்ளார்.

இருட்டைக் கண்டு  அஞ்ச வேண்டாம்; “சூரிய உதயம் வரும்; உதயநிதியும் வருவார்”.. கமல்ஹாசன் பேச்சு!!
கமல்ஹாசன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Nov 2025 09:48 AM IST

சென்னை, நவம்பர் 28: மகளிர் உரிமைத்தொகை என்ற மக்கள் நீதி மையம் கட்சியின் சிந்தனையை திமுக செயல் படுத்தி உள்ளதாகவும் திமுக மற்றும் மக்கள் நீதி மையம் ஆகிய இரு கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான் எனவும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் குறிபிட்டுள்ளார். மேலும், திமுக என்பது ஒரு உணர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதற்கான பணிகளும் அரசியல் கட்சிகள் தரப்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, 2018 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற ஒரு கட்சியை தொடங்கினார். அப்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது அக்கட்சி. ஆனால், ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், அவர் காங்கிரசுடன் கைகோர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் திமுகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்தார்.

இதையும்  படிக்க: ரயிலில் தள்ளி மாணவி கொலை: “இது அரிதிலும் அரிதான வழக்கல்ல”.. குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு!

திமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து விளக்கம்:

அதாவது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட போட்டியிடவில்லை. இந்த சூழலில் கமல்ஹாசன் மீது கடுமையான விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் வகையில், கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுகவுடன் ஏன் கூட்டணி வைத்தேன்? என்பது குறித்து அவர் விளக்கமளித்தார். அதில்,”எவனோ வந்து ரிமோட் எடுத்துட்டு போயிட்டான் அப்படி அமைந்த கூட்டணி தான் இது. இந்த கூட்டணியை புரிஞ்சா புரிஞ்சுக்கோங்க இல்லனா விட்ருங்க என பேசியிருந்தார்.

திமுக, மநீம கொள்கை ஒன்றை:

இந்த சூழலில், நேற்றைய தினம் (நவ.27) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது சென்னையில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியலில் இக்கட்டான சூழலுக்காக நான் திமுகவுடன் கைகோர்க்கவில்லை. எங்கள் கொள்கைகள் ஒரே மாதிரியானது. நாங்கள் சொன்ன சிந்தனையான, மகளிர் உரிமை தொகையை கையில் எடுத்துக்கொண்டு திமுக செயல் படுத்தியது. இவர்களோடு சேர்வதா? அல்லது யார் என்று தெரியாமல் இருப்பவர்களுடன் சேர்வதா? என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : அதிமுகவை விட இரண்டரை மடங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

உதயமும் வரும், உதயநிதியும் வருவார்:

மேலும், கலைஞருக்கு ஓய்வு கொடுத்தது சரிதான். அந்த ஓய்வு கூட எங்களுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், அந்த ஓய்வு கூட கொடுக்கவில்லை என்றால் 90 வயதுக்கு மேல் அவர் வாழ்ந்திருக்க மாட்டார். அந்த ஓய்வுக்கு நன்றி. அதேபோல், அவருடைய பேரனும் நீண்ட நாள் வாழ்ந்து இந்த அமைப்புக்கு நன்மை சேர்க்க வேண்டும். திமுக என்பது ஒரு உணர்வு, என் வயது என்னவோ அதுதான் திமுக தொடர்பான எனது புரிதல். நான் கண்திறந்த போது பார்த்த சூரியன், இருட்டை பார்த்து பயப்பட வேண்டாம் விடியல் வரும் உதயமும் வரும், உதயநிதியும் வருவார் என பேசினார்.