Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தை நோக்கி நகரும் திட்வா புயல்.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..

Ditwah Cyclone: வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த திட்வா புயலால் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை நோக்கி நகரும் திட்வா புயல்.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Nov 2025 06:15 AM IST

வானிலை நிலவரம், நவம்பர் 28, 2025: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு இலங்கை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு சூறாவளி புயலாக நவம்பர் 27, 2025 அன்று வலுப்பெற்றது. இந்த புயல் 13 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு–வடமேற்கு நோக்கி நகர்ந்து, மட்டக்களப்பிலிருந்து (இலங்கை) சுமார் 20 கிமீ தென்மேற்கிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து (இலங்கை) 170 கிமீ வட–வடகிழக்கிலும், திருகோணமலையிலிருந்து (இலங்கை) 120 கிமீ தென்–தென்கிழக்கிலும், புதுச்சேரியிலிருந்து (இந்தியா) 520 கிமீ தென்–தென்கிழக்கிலும், சென்னையிலிருந்து (இந்தியா) 620 கிமீ தென்–தென்கிழக்கிலும் நிலைகொண்டுள்ளது.

தமிழகத்தை நோக்கி நகரும் திட்வா புயல்:

இது இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக வடக்கு–வடமேற்கு நோக்கி நகர்ந்து, நவம்பர் 30ஆம் தேதி அதிகாலையில் வட–வடமேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இலங்கையை புரட்டிப்போட்ட தித்வா புயல் – இதுவரை 20 பேர் பலி, 14 பேர் மாயம் – தமிழகத்திலும் எதிரொலிக்குமா?

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை:

வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த திட்வா புயலால் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 28 நவம்பர் 2025 ஆம் தேதியான இன்று நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தஞ்சாவூரில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியர் படுகொலை – காதலன் வெறிச்செயல் – என்ன நடந்தது?

அதேபோல் நவம்பர் 29, 2025 அன்று திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை — அதாவது இந்த மாவட்டங்களில் அதிக கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:

அதே சமயத்தில் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 30, 2025 அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த திட்டுவா புயலின் காரணமாக தரைக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், சில சமயங்களில் 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.